பட்டியல் PTI Graphics
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ.85.39 ஆக முடிவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 16 காசுகள் உயர்ந்து ரூ.85.39 ஆக நிலைபெற்றது.

DIN

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று (திங்கள்கிழமை) 16 காசுகள் உயர்ந்து ரூ.85.39 ஆக நிலைபெற்றது. இதற்கு டாலர் பலவீனமாக இருப்பதும், ரிசர்வ் வங்கியின் முக்கிய வட்டி விகிதங்கள் மேலும் குறையும் என்ற எதிர்பார்ப்புகளாலும் இந்திய ரூபாய் இன்று கணிசமாக உயர்ந்து முடிந்தன.

இருப்பினும், நிலையற்ற பங்குச் சந்தைகள், அந்நிய நிதி ஆகியவை வெளியேறுதல் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக உயர்வு தடுக்கப்பட்டது என்று அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.55 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.85.30 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.85.55 ஐ தொட்ட நிலையில், முடிவில் அதன் இறுதி நிலையிலிருந்து 16 காசுகள் உயர்ந்து ரூ.85.39-ஆக முடிந்தது.

வெள்ளிக்கிழமையன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 7 காசுகள் குறைந்து 85.55 ஆக முடிவடைந்தது.

இதையும் படிக்க: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குஜராத் கண்காட்சி விமரிசை! 40 லட்சம் பக்தர்கள், 5000 காவலர்கள், 1000 பேருந்துகள்!

சோயா பீன்ஸ் பிரச்னை! சீன அதிபருடன் டிரம்ப் சந்திப்பு!

குலசை தசரா: இன்று சூரசம்ஹாரம்!

திருப்பூர்: கட்டாய ஆள்குறைப்புக்குத் தள்ளப்படும் சிறு, குறு நிறுவனங்கள்

மத்தியப் பிரதேசம்: பாகிஸ்தான் கொடி அச்சிடப்பட்ட பலூன்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT