PTI Graphics
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.85.68 ஆக நிறைவு!

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை எதிர்பார்த்ததை விட அதிகமாக 50 அடிப்படை புள்ளிகள் குறைத்ததைத் தொடர்ந்து, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.85.68 ஆக நிறைவடைந்தது.

DIN

மும்பை: ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை எதிர்பார்த்ததை விட அதிகமாக 50 அடிப்படை புள்ளிகள் குறைத்ததைத் தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.85.68 ஆக நிறைவடைந்தது.

ரிசர்வ் வங்கி ஜம்போ விகிதக் குறைப்புடன் சந்தையை ஆச்சரியப்படுத்தியதால், ரூபாய் மதிப்பு சீராக வர்த்தகம் செய்யப்பட்டதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

மேலும், உள்நாட்டு சந்தைகளில் ஏற்பட்ட எழுச்சியை தொடர்ந்து, இந்திய ரூபாய் 1% அதிகமான உயர்ந்து நிலைபெற்றது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.91 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.85.66 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.86 ஐ தொட்ட நிலையில், முடிவில் 11 காசுகள் உயர்ந்து ரூ.85.68 ஆக முடிவடைந்தது.

நேற்றைய வர்த்தகத்தில் இந்திய ரூபாய் அதன் இரண்டு நாள் தொடர் சரிவை முறியடித்து டாலருக்கு நிகராக 8 காசுகள் உயர்ந்து ரூ.85.79 ஆக நிறைவடைந்தது.

இதையும் படிக்க: ரெப்போ விகிதம் குறைப்பு எதிரொலி: பங்குச் சந்தை உயர்ந்து முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகல்!

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்... ஹிருதயபூர்வம் பற்றி மாளவிகா!

விஜயகாந்த் நிலைதான் விஜய்க்கு! காசு கொடுத்து கூட்டிய கூட்டம்! வைகோவை நம்புகிறோம் TKS Elangovan நேர்காணல் | Tvk Vijay | MKStalin

அமெரிக்கா வரியை உயர்த்தாவிட்டால், இந்தியா வரியை குறைத்திருக்காது: டிரம்ப்

டாடா ஸ்டீல் 6% உயர்வுடன் நிறைவு!

SCROLL FOR NEXT