வணிகம்

2025-26ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.2% என கணிப்பு!

2025-26 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.2 சதவிகிதமாக இருக்கும் என்றது முன்னணி மதிப்பீட்டு நிறுவனமான (ஐசிஆர்ஏ).

DIN

கொல்கத்தா: முன்னணி மதிப்பீட்டு நிறுவனமான (ஐ.சி.ஆர்.ஏ.) அதன் சமீபத்திய கண்ணோட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.2% இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

அதே வேளையில் மொத்த மதிப்பு கூட்டப்பட்ட வளர்ச்சியும் 6.4 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாகக் குறையும் என்றுது.

பணவீக்கத்தைப் பொறுத்தவரை, நுகர்வோர் விலைக் குறியீடு 3.5 சதவிகிதத்திற்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மொத்த விலைக் குறியீடு நடப்பு நிதியாண்டில் 1.8 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கும்.

2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவிகிதமாக இருக்கும் என்று ஐ.சி.ஆர்.ஏ. கணித்துள்ளது. அதே காலகட்டத்தில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1.2 சதவிகிதம் முதல் 1.3 சதவிகிதம் வரை இருக்கும் என்றுது.

2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கணிசமான வருமான வரி நிவாரணம், வட்டி விகிதக் குறைப்புக்கள், இ.எம்.ஐ. மற்றும் உணவுப் பணவீக்கம் குறைந்து, வீட்டு உபயோக வருமானம் அதிகரிக்கும். அதே வேளையில் ஏற்றுமதியில் மந்தநிலை குறுகிய காலத்தில் தொடரும் என்றுது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் 13 காசுகள் சரிந்து ரூ.86.47 ஆக முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சவரனுக்கு ரூ.800 குறைந்த தங்கம் விலை!

திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்!

ஜல்லிக்கட்டு வா்ணனையாளா்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரிக்கை

10, 12 வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு! முழு விவரம்!

எனது தலைமையிலான அமர்வு விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை! தலைமை நீதிபதி

SCROLL FOR NEXT