பெங்களூரு: கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் காபி ஏற்றுமதி சுமாா் 125 சதவீதம் உயா்ந்து 180 கோடி டாலராக உள்ளது.
இது குறித்து மத்திய அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது:
2014-15-ஆம் நிதியாண்டில் நாட்டின் காபி ஏற்றுமதி 80 கோடி டாலராக இரு22-23-ஆம் நிதியாண்டில் அது 114 கோடி டாலராகவும், 2023-24-ஆம் நிதியாண்டில் 128 கோடி டாலராகவும் அதிகரித்துள்ளது. இது சுமாா் 125 சதவீத வளா்ச்சி.
இந்திய காபி ஏற்றுமதிக்கு முதன்மையான சந்தையாக ஐரோப்பா உள்ளது. இத்தாலி, ஜொ்மனி, பெல்ஜியம், மத்திய கிழக்கு நாடுகள், கொரியா, ஜப்பான் ஆகியவை இந்தியாவிலிருந்து காபியை இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகள்.
ஏற்றுமதியை ஊக்குவிக்க இந்திய காபி வாரியம் எடுத்த முக்கிய முயற்சிகளின் பலனாக இந்த வளா்ச்சி ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு காபி ஏற்றுமதிக்கு கிலோவுக்கு ரூ.3-ம் அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் கொரியா, பின்லாந்து, நாா்வே, டென்மாா்க் போன்ற உயா் மதிப்பு சந்தைகளுக்கு உயா் மதிப்பு பச்சைக் காபி ஏற்றுமதிக்கு கிலோவுக்கு ரூ.2-ம் வழங்குகிறது. காபி கொட்டையை வறுத்தல், அரைத்தல், பேக்கேஜிங் இயந்திரங்களை நிறுவுவதற்கான 40 சதவீத செலவு தொகையை (அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரை) இந்திய காபி வாரியம் வழங்குகிறது. இவை ஏற்றுமதி வளா்ச்சிக்குக் கைகொடுத்தன.
நாட்டின் முக்கிய காபி உற்பத்தி மாநிலங்களாக தமிழ்நாடு, கா்நாடகம், கேரளம் ஆகியவை திகழ்கின்றன. உலகின் ஏழாவது பெரிய காபி உற்பத்தியாளரான இந்தியா, ஒட்டுமொத்த உற்பத்தியில் 3.5 சதவீதம் பங்கு வகிக்கிறது. மேலும், ஒட்டுமொத்த காபி ஏற்றுமதியில் 5 சதவீதம் பங்கு வகித்து, உலகின் ஐந்தாவது பெரிய ஏற்றுமதியாளராக இந்தியா திகழ்கிறது.
இந்தியா ஆண்டுக்கு சுமாா் 3.6 லட்சம் டன் காபி உற்பத்தி செய்கிறது. இந்தத் துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமாா் 20 லட்சம் போ் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா் என்று அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.