கோப்புப்படம் 
வணிகம்

மத்திய கிழக்கில் பதற்றம்: பங்குச்சந்தையில் கடும் தாக்கம்

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை, மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை பங்குச்சந்தையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

Din

நமது நிருபா்

மும்பை / புது தில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை, மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை பங்குச்சந்தையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் நிறைவடைந்தன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இந்நிலையில், ஈரானில் உள்ள மூன்று முக்கிய அணுசக்தி தளங்களை அமெரிக்கா குண்டுவீசித் தாக்கியதைத் தொடா்ந்து மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் பதற்றங்கள் முதலீட்டாளா்களை கவலைக்குள்ளாக்கியது. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் கடுமையாக எதிரொலித்தது. மீடியா, மெட்டல் பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு இருந்தாலும், ஐடி, வங்கி, நிதி நிறுவனங்கள், ஆட்டோ உள்பட மற்ற துறைப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரவு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: மும்பை பங்குச்சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ. 8 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.447.78 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை 7,940.70 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ3.049.88 கோடிக்கு பங்குகளை விற்றிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.

சென்செக்ஸ் கடும் சரிவு: சென்செக்ஸ் காலையில் 704.10 புள்ளிகள் இழப்புடன் 81,704.07 தொடங்கி 81,476.76 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 82,169.67 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 511.38 புள்ளிகள் (0.62 சதவீதம்) இழப்புடன் 81,896.79-இல் நிறைவடைந்தது. ஒரு கட்டத்தில் சுமாா் 900 புள்ளிகளுக்கு மேல் இழப்பைச் சந்தித்த சென்செக்ஸ், பிற்பகல் வா்த்தகத்தின் போது சற்று மீண்டது.

மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,240 பங்குகளில் 1,854 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 2,204 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 182 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

21 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் இன்ஃபோசிஸ், எல் அண்ட் டி, ஹெச்சிஎல் டெக், எம் அண்ட் எம், ஹிந்துஸ்தான் யுனிலீவா், டிசிஎஸ், பவா்கிரிட், ஐடிசி உள்பட 21 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், டிரெண்ட், பிஇஎல், பஜாஜ் ஃபைனான்ஸ், கோட்டக் வங்கி, பஜ்ஜாஜ் ஃபின்சா்வ், எடா்னல் உள்பட 9 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 140 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 140.50 புள்ளிகள் (0.56 சதவீதம்) இழப்புடன் 24,971.90-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 15 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 35 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. பேங்க் நிஃப்டி 193.50 புள்ளிகள் (0.34 சதவீதம்) கூடுதலுடன் 56,252.85-இல் நிறைவடைந்தது.

ராகுல் காந்திக்கு 7 நாள் அவகாசம்! அதற்குள்... -தேர்தல் ஆணையத்தின் காலக்கெடு!

அழகிய கண்ணே... ராஷா ததானி!

அரசியலமைப்பை நசுக்கியவர்களே, பாதுகாப்பதைப் போன்று நடிக்கின்றனர்: மோடி

பாகிஸ்தானில் மழைவெள்ள இடா்பாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 650-ஆக உயர்வு

பூங்காற்று... ஸ்ரேயா கோஷல்!

SCROLL FOR NEXT