தங்கம் | கோப்புப் படம் 
வணிகம்

ஈரான்-இஸ்ரேல் போர் நிறுத்தம் எதிரொலி: தங்கம் விலை ரூ.900 சரிவு!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில், பாதுகாப்பான புகலிடமான தங்கத்தின் விலை இன்று தலைநகர் தில்லியில் ரூ.900 சரிந்து ரூ.98,900 ஆக நிலைபெற்றது.

DIN

புதுதில்லி: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில், பாதுகாப்பான புகலிடமான தங்கத்தின் விலை இன்று தலைநகர் தில்லியில் ரூ.900 சரிந்து ரூ.98,900 ஆக நிலைபெற்றது.

அகில இந்திய சரஃபா சங்கத்தின் கூற்றுப்படி, 99.9 சதவிகித தூய்மையான தங்கம், முந்தைய சந்தை அமர்வில் 10 கிராமுக்கு ரூ.99,800 ஆக இருந்தது. அதே வேளையில் 99.5 சதவிகித தூய்மையான தங்கம் ரூ.800 குறைந்து 10 கிராமுக்கு ரூ.98,300 ஆக உள்ளது. அதுவே நேற்று ரூ.99,100 ஆக இருந்தது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே முழுமையான போர் நிறுத்தத்தை அமெரிக்கா உறுதி செய்த பிறகு பாதுகாப்பான புகலிட தேவை குறைந்து வருவதால் தங்கத்தின் விலை தற்போது அழுத்தத்தில் உள்ளதாகவும், இது மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் மறைந்து வருவதால், முதலீட்டாளர்கள் லாபத்தை முன்பதிவு செய்து தங்கத்திலிருந்து பின்வாங்கி வருகின்றனர்.

அதே வேளையில் இன்று (செவ்வாய்க்கிழமை) வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1,04,200 ஆக உள்ளது. இது அதன் முந்தைய சந்தை முடிவிலிருந்து கிலோ ஒன்றுக்கு ரூ.1,05,200 ஆக இருந்தது.

இதற்கிடையில், வெளிநாட்டு சந்தைகளில் ஸ்பாட் தங்கம் $46.05 குறைந்து அவுன்ஸ் ஒன்றுக்கு $3,323.05 ஆக உள்ளது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 75 காசுகள் உயர்ந்து ரூ.86.03 ஆக முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“அதிமுக ஏன் தலையிடவில்லை?” தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் குறித்து தொல். திருமாவளவன் விமர்சனம்

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - தனுசு

SCROLL FOR NEXT