ஹானர் எக்ஸ் 9 சி  படம் / நன்றி - ஹானர்
வணிகம்

உடையாத ஸ்மார்ட்போன் உண்டா? அறிமுகமாகிறது ஹானர் எக்ஸ் 9 சி!

2 மீட்டர் தூரத்தில் இருந்து தவறினாலும் ஸ்மார்ட்போன் உடையாது என ஹானர் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

DIN

ஹானர் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விற்பனை யுக்தி பலரைக் கவர்ந்துள்ளது. அதாவது, 2 மீட்டர் தூரத்தில் இருந்து தவறினாலும் ஸ்மார்ட்போன் உடையாது என ஹானர் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

ஹானர் நிறுவனத்தின் எக்ஸ் 9 சி என்ற புதிய ஸ்மார்ட்போன், ஜூலை 12 - 14 தேதிகளில் வெளியாகும் என ஹானர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் விளம்பரத்தை பிரபல இணைய விற்பனை தளமான அமேசானிலும் வெளியிட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பெரும்பாலும் விற்பனைக்கான யுக்தியாக, அதன் சிறப்பம்சங்களை முன்னிலைப்படுத்துவது வழக்கம்.

அந்த வகையில் ஹானர் எக்ஸ் 9 சி ஸ்மார்ட்போன், மற்ற ஸ்மார்ட்போன்களின் உறுதித்தன்மைக்கு சவால்விடும் வகையில் 2 மீட்டர் தூரத்தில் இருந்து தவறி விழுந்தாலும் உடையாது என்ற அம்சத்தை முன்னிலைப்படுத்தி வருகிறது.

சிறப்பம்சங்கள்

  • ஹானர் எக்ஸ் 9 சி ஸ்மார்ட்போனில், டிராப் டெக்னாலஜி 2.0 என்ற புதிய தொழில்நுட்பத்தின் மூலம் உறுதித் தன்மை மேம்படுத்தப்பட்டுள்ளது. 2 மீட்டர் தூரத்தில் இருந்து விழுந்தாலும் உடைவதற்கான வாய்ப்பு 166% குறைவு என உறுதியளித்துள்ளது.

  • தட்டையான டைட்டானியம் உலோகத்தாலான புறவடிவமைப்பு உடையது

  • 6600 mAh பேட்டரி திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது. 39% பேட்டரி திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

  • 28.8 மணி நேரம் தொடர்ந்து விடியோக்களை பார்க்கலாம். 48.4 மணி நேரம் தொடர்ந்து பாடல்களை கேட்கலாம்.

  • திரையின் வெளிச்சம் கண்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாத வகையில் ஐ கம்ஃபோர்ட் டிஸ்பிளே அம்சத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. 4000nits அம்சம் கொண்டது.

  • 108MP ஐஓஎஸ் மோஷன் சென்சார் பொருத்தப்பட்ட கேமராக்கள் உடையது. இதனால், விடியோக்களை எந்தவித தடுமாற்றமுமின்றி பதிவு செய்ய முடியும்.

  • 360 டிகிரியிலும் நீர்புகாத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

  • மேல் - கீழ்புறம் என இரண்டு ஸ்பீக்கர்கள் உடையது.

இதையும் படிக்க | உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள்! ஜூலை 8-ல் அறிமுகம்

The HONORX9c5G features SGS 5-Star Drop Resistance even up to 2 meters with tough design and global trust

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT