FTA  
வணிகம்

தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்குவதாக இந்தியா, நியூசிலாந்து அறிவிப்பு!

முன்மொழியப்பட்ட தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதாக இந்தியாவும் - நியூசிலாந்தும் இன்று அறிவித்துள்ளது.

DIN

புதுதில்லி: முன்மொழியப்பட்ட தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதாக இந்தியாவும் - நியூசிலாந்தும் இன்று அறிவித்துள்ளது.

பொருட்கள், சேவைகள் மற்றும் முதலீட்டில் வர்த்தகத்தை அதிகரிக்க இந்தியாவும் நியூசிலாந்தும் ஏப்ரல் 2010 ல் முதல் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின.

இருப்பினும், ஒன்பதாவது சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, 2015ல் இந்த பேச்சுவார்த்தை முடங்கியது.

தற்போது இந்தியா மற்றும் நியூசிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மூலம் விரிவான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதை அறிவிப்பதில் இரு நாடுகளும் மகிழ்ச்சியடைகின்றன என்று வர்த்தக அமைச்சகம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் மார்ச் 16 முதல் நான்கு நாள் பயணமாக இங்கு வந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் நியூசிலாந்தின் வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர் டோட் மெக்லே ஆகியோரின் சந்திப்புக்குப் பிறகு அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டது.

இதையும் படிக்க: தனது கிளைகளை விரிவுபடுத்தும் கரூர் வைஸ்யா வங்கி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

SCROLL FOR NEXT