ரிசர்வ் வங்கி.. 
வணிகம்

ஒழுங்குமுறை விதிமுறைகளை மீறியதாக ரிசர்வ் வங்கி அபராதம் விதிப்பு!

ஒழுங்குமுறை இணக்கங்களில் குறைபாடுகளுக்காக ஐசிஐசிஐ வங்கி, பாங்க் ஆப் பரோடா உள்ளிட்ட 2 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி இன்று அபராதம் விதித்துள்ளது.

DIN

மும்பை: ஒழுங்குமுறை இணக்கங்களில் குறைபாடுகளுக்காக ஐசிஐசிஐ வங்கி, பாங்க் ஆப் பரோடா உள்ளிட்ட 2 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி இன்று அபராதம் விதித்துள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வங்கிகளில் சைபர் பாதுகாப்பு கட்டமைப்பு, கேஒய்சி மற்றும் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு - வழங்கல் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி வழங்கிய வழிகாட்டுதல்களுக்கு இணங்காததற்காக ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.97.80 லட்சம் அபராதமும், வங்கிகளால் வழங்கப்படும் நிதி சேவைகள் மற்றும் வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை, குறித்த சில உத்தரவுகளுக்கு இணங்காததற்காக பாங்க் ஆப் பரோடாவுக்கு ரூ.61.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு அறிக்கையில், கிசான் கிரெடிட் கார்டு மூலம் பெறப்பட்ட விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான மானியத் திட்டம், குறித்த சில வழிகாட்டுதல்களை பின்பற்றாததற்காக ஐடிபிஐ வங்கி மீது ரூ.31.8 லட்சம் அபராதமும், கேஒய்சி தொடர்பான சில வழிகாட்டுதல்களுக்கு இணங்காததற்காக பேங்க் ஆப் மகாராஷ்டிராவுக்கு ரூ.31.80 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஊழியர்களின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தும் நெட்கியர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மேம்பாலம் கட்டுமானப் பணி: அமைச்சா் ஆய்வு

காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடத் தோ்வு: 864 போ் பங்கேற்பு!

SCROLL FOR NEXT