PTI Graphics
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் 1 காசு உயர்ந்து ரூ.85.53 ஆக முடிவு!

வலுவான அந்நிய வரவுகள் மற்றும் டாலர் குறியீட்டில் ஏற்பட்ட ஓரளவு சரிவு ஆகியவற்றின் பின்னணியில் இன்றைய வர்த்தகத்தில் இந்திய ரூபாய் 1 காசு உயர்ந்து 85.53 ஆக நிறைவடைந்தது.

DIN

மும்பை: வலுவான அந்நிய வரவுகள் மற்றும் டாலர் குறியீட்டில் ஏற்பட்ட ஓரளவு சரிவு ஆகியவற்றின் பின்னணியில் இன்றைய வர்த்தகத்தில் இந்திய ரூபாய் 1 காசு உயர்ந்து 85.53 ஆக நிறைவடைந்தது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு, உள்நாட்டில் பங்குச் சந்தைகள் சரிவு மற்றும் ஏப்ரல் மாதத்தில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை விரிவடைவதைக் காட்டும் தரவுகளால் இந்திய ரூபாய் சரிவு ஏற்பட்டதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.28 ஆக தொடங்கி ரூ.85.28 முதல் ரூ.85.70 வரை வர்த்தகமானது. இறுதியில் அது முந்தைய முடிவை விட 1 காசு உயர்ந்து ரூ.85.53 ஆக நிலைபெற்றது.

நேற்றைய வர்த்தகத்தில், இந்திய ரூபாய் 22 காசுகள் குறைந்து ரூ.85.54ஆக நிறைவடைந்தது.

இதையும் படிக்க: சரிவுடன் நிறைவடைந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 200.15 புள்ளிகள் இழப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT