ஹோண்டா ரெபல் 500.. 
வணிகம்

கவாஸகி எலிமினேட்டருக்குப் போட்டியாக ஹோண்டா ரெபல்!

கவாஸகி எலிமினேட்டருக்குப் போட்டியாக ஹோண்டா ரெபல் 500.

DIN

ஹோண்டா மோட்டர் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ஹோண்டா ரெபல் 500 பைக்கை இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட டீலர்கள் மூலம் இந்த வாகன விற்பனைக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

ஹரியாணாவின் குருகிராமில் ஹோண்டா ரெபல் 500-ன் எக்ஸ் ஸோரும் விலை ரூ.5.12 லட்சமாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது குருகிராம், பெங்களூரு, மும்பை ஆகிய இடங்களில் பிரத்யேகமாக ஜூன் முதல் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், பாப்பர் ஸ்டைல் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது மேட் கன்பவுடர் நிறத்தில் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா ரெபல் 500-ல் சிறப்பசங்களாக 471 சிசி லிக்விட் கூல்ட் என்ஜின், 4 ஸ்ட்ரோக், 8 வால்வுகளுடன் லிக்விட் கூல்ட் டுவின் சிலிண்டர் என்ஜின், 6 கியர் பாக்ஸ் சிஸ்டம், 45.59 குதிரைத் திறன் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 500 RPM-ல் 43.3 Nm உடன் செயல்படும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 21 கி.மீ. வரை கொடுக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பங்குச் சந்தை வணிகம் சரிவு! முதலீட்டாளர்களுக்கு ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மம்மூட்டிக்கு என்ன ஆனது? மோகன்லால் பதிவால் ரசிகர்கள் நெகிழ்ச்சி!

ஆபரேஷன் சிந்தூர்: 3 - 12 வகுப்புகளுக்கு சிறப்பு பாடத் தொகுப்பு!

விருத்தாசலம் அருகே கார் விபத்தில் 3 பேர் பலி; 3 பேர் காயம்!

தில்லி முதல்வர் மீது தாக்குதல்: குறைகேட்பு கூட்டத்தில் பரபரப்பு!

தமிழகத்தில் 10 இடங்களில் என்ஐஏ சோதனை

SCROLL FOR NEXT