கோப்புப் படம் ANI
வணிகம்

ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு!

பங்குச்சந்தை இன்று(மே 21) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

DIN

பங்குச்சந்தை இன்று(மே 21) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,327.61 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

காலை 11.40 மணியளவில், சென்செக்ஸ் 602.82 புள்ளிகள் அதிகரித்து 81,789.26 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 193.15 புள்ளிகள் உயர்ந்து 24,877.05 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

துறைசார் குறியீடுகளில், நிஃப்டி ஆட்டோ, வங்கி, எஃப்எம்சிஜி, பார்மா, ரியால்டி துறைகள் 1.5% வரை உயர்ந்தன. அதேநேரத்தில் நுகர்வோர் சாதனங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு துறை பங்குகள் 0.7% வரை சரிந்தன.

நெஸ்லே, ஹெச்டிஎப்சி வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர், மாருதி, அல்ட்ராடெக் சிமென்ட், ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டாடா மோட்டார்ஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டியுள்ளன.

எடர்னல், இண்டஸ்இண்ட் வங்கி, அதானி போர்ட்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

SCROLL FOR NEXT