JK Lakshmi Cement 
வணிகம்

ஜே.கே. லட்சுமி சிமென்ட் 4-வது காலாண்டு லாபம் 19% அதிகரிப்பு!

ஜே.கே. லட்சுமி சிமென்ட் மார்ச் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 19.2 சதவிகிதம் அதிகரித்து ரூ.193.17 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

DIN

புதுதில்லி: ஜே.கே. லட்சுமி சிமென்ட் மார்ச் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 19.2 சதவிகிதம் அதிகரித்து ரூ.193.17 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜே.கே. அமைப்பின் முதன்மை நிறுவனமான ஜே.கே. லட்சுமி சிமென்ட் லிமிடெட் நிறுவனமானது தனது ஒழுங்குமுறை தாக்கலில், ஒரு வருடம் முன்பு ஜனவரி முதல் மார்ச் வரையான காலகட்டத்தில் நிறுவனம் ரூ.162.06 கோடி லாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மார்ச் காலாண்டில் அதன் செயல்பாடுகளிலிருந்து வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 6.5 சதவிகிதம் அதிகரித்து ரூ.1,897.62 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

காலாண்டில் மொத்த செலவு ரூ.1,667.44 கோடியாக இருந்த நிலையில், இது ஆண்டுக்கு ஆண்டு 7.10 சதவிகிதம் அதிகமாகும். அதே வேளையில், காலாண்டில் விற்பனை அளவு 10.3 சதவிகிதம் குறைந்து 35.98 லட்சம் டன்னாக உள்ளதாக தெரிவித்தது.

இந்நிலையில், மற்ற வருமானம் உள்பட மொத்த வருமானமும் 5.88 சதவிகிதம் அதிகரித்து ரூ.1,913.55 கோடியாக உள்ளதாக தெரிவித்தது.

இருப்பினும், நிதியாண்டு 2025-ல், நிறுவனத்தின் நிகர லாபம் 38.1 சதவிகிதம் குறைந்து ரூ.301.99 கோடியாக இருந்தது. அதுவே ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.487.87 கோடியாக இருந்தது. அதே வேளையில் நிறுனத்தின் மொத்த வருமானம் 9 சதவிகிதம் குறைந்து ரூ.6,239.05 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ.85.37 ஆக முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கண்காணிப்பு கேமிரா

திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்!

மீன்பிடி படகு கவிழ்ந்ததில் மீனவா் உயிரிழப்பு

உரிய நேரத்தில் வாக்காளா் பட்டியல்களை சில கட்சிகள் ஆராயவில்லை: தோ்தல் ஆணையம்

ஜம்மு - காஷ்மீா் பெருவெள்ளம்: மீட்புப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT