ஆர்பிஐ (கோப்புப் படம்) ENS
வணிகம்

விரைவில் 7 நாள்களுக்கும் குறைவான நிரந்தர வைப்புக் கணக்கு! ஆர்பிஐ யோசனை

விரைவில் 7 நாள்களுக்கும் குறைவான நிரந்தர வைப்புக் கணக்கு திட்டம் குறித்து யோசனை கேட்டிருக்கும் ஆர்பிஐ

இணையதளச் செய்திப் பிரிவு

வங்கிகளில் ஏழு நாள்களுக்கும் குறைவான நிரந்தர வைப்புக் கணக்குகளை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருகிறது.

7 நாள்களுக்கும் குறைவான நிரந்தர வைப்புக் கணக்குகளைத் தொடங்குவது குறித்து வங்கிகளிடம் மத்திய ரிசர்வ் வங்கி ஆலோசனை கேட்டிருப்பதாகவும், இந்த மாத இறுதிக்குள் வங்கிகள் தங்களது கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம், நிரந்தர வைப்புக் கணக்குகளை வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்க ஏற்ற காலங்களை நிர்ணயித்துக் கொள்ளலாம், மக்களிடையே நிரந்தர வைப்புக் கணக்கு குறித்து ஆர்வம் அதிகரிக்கலாம் மற்றும் வங்கிகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்று ஆர்பிஐ நம்புகிறது.

ஆண்டுதோறும் நிரந்தர வைப்புக் கணக்குகள் தொடங்கப்படுவதன் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு 10 சதவீதம் அளவுக்குக் குறைந்து வரும் நிலையில், ஆர்பிஐ இந்த முன்னெடுப்பை செய்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 மே 2ஆம் தேதியை ஒப்பிட்டால் நிரந்தர வைப்புக் கணக்குத் தொடங்குவது 13 சதவீதம் குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக வட்டி விகிதம் குறைந்து வருவதால், நிரந்தர வைப்புக் கணக்குகள் குறைந்திருப்பதாகவும், இதனால், வங்கிகள் நிதி மேலாண்மையில் சிக்கலைச் சந்திப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவேதான் ஆர்பிஐ இந்திய யோசனையை முன்மொழிந்து வங்கிகளிடம் கருத்துக் கேட்டுள்ளது. இது ஆலோசனை என்ற அளவில் இருப்பதாகவும், வங்கிகள் இது குறித்து தன்னிச்சையாக முடிவெடுக்கலாமா என்பது குறித்தும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீா்நிலைகள், சாலையோரம் வசிப்போருக்கு மாற்று இடம்

தில்லியில் மாசுவைப் கட்டுப்படுத்துவதில் பாஜக அரசு முற்றிலும் தோல்வி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

உலக கோப்பை ஹாக்கி விழிப்புணா்வு போட்டிகள் நடத்த தீா்மானம்

பள்ளி வேன் மீது வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு: 5 போ் காயம்

திருச்செந்தூா் கோயில் சஷ்டி மண்டபத்தை கல் மண்டபமாக மாற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT