வணிகம்

கிரானுல்ஸ் இந்தியாவின் 4-வது காலாண்டு நிகர லாபம் 17% ஆக உயர்வு!

மருந்து நிறுவனமான கிரானுல்ஸ் இந்தியா, மார்ச் 31, 2025 உடன் முடிவடைந்த 4-வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் 17% அதிகரித்து ரூ.152 கோடியாக உள்ளது.

DIN

புது தில்லி: மருந்து நிறுவனமான கிரானுல்ஸ் இந்தியா, மார்ச் 31, 2025 உடன் முடிவடைந்த 4-வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் 17% அதிகரித்து ரூ.152 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் கடந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் ரூ.130 கோடி வரிக்குப் பிந்தைய லாபமாக பதிவு செய்துள்ளது.

செயல்பாடுகளிலிருந்து வந்த வருவாய் 4-வது காலாண்டில் ரூ.1,197 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது ரூ.1,176 கோடியாக இருந்தது. நிதியாண்டு 2025ல் மருந்து நிறுவனம் ரூ.501 கோடி ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபமாக பதிவு செய்தது. அதே வேளையில் நிதியாண்டு 2024ல் இது ரூ.405 கோடியாக இருந்தது. இருப்பினும் நிறுவனத்தின் வருவாய் ரூ.4,482 கோடியாகக் குறைந்துள்ளது. 2023-24 நிதியாண்டில் இதுவே ரூ.4,506 கோடியாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நிறுவனத்தின் விற்பனை நிலையாக இருந்தபோதிலும், இந்த ஆண்டு நிலையான லாபம் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றார் கிரானுல்ஸ் இந்தியாவின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கிருஷ்ண பிரசாத்.

மருந்து நிறுவனம் 2024-25 நிதியாண்டிற்கு தலா 1 ரூபாய் முக மதிப்பில் உள்ள ஒரு பங்கிற்கு ரூ.1.50 என்ற இறுதி ஈவுத்தொகையை பரிந்துரைத்துள்ளதாகக் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 1.29 சதவிகிதம் குறைந்து ரூ.522.05 ஆக உள்ளது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இன்று சமமாக முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT