மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 10 காசுகள் குறைந்து ரூ.85.48 ஆக நிறைவடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் நேர்மறையான உள்நாட்டு பங்குச் சந்தை வர்த்தகம் மற்றும் அந்நிய நிதி வரத்து ஆகியவற்றால் உள்ளூர் நாணயம் அதன் சரிவை வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.56 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.85.40 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.85.62 ஐ தொட்ட நிலையில், முடிவில் 10 காசுகள் சரிந்து ரூ.85.48-ஆக முடிவடைந்தது.
நேற்று (புதன்கிழமை) வர்த்தக நேர முடிவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டு காசுகள் உயர்ந்து ரூ.85.38 ஆக முடிந்தது.
இதையும் படிக்க: இரண்டு நாட்கள் சரிவுக்குப் பிறகு மீண்ட இந்திய பங்குச் சந்தைகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.