முகப்பு
வணிகம்

அசோக் லேலேண்ட் விற்பனை 16% அதிகரிப்பு!

வணிக வாகன தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலேண்ட், அக்டோபர் மாதம் அதன் மொத்த விற்பனை 16% அதிகரித்து 17,820 ஆக உள்ளதாக தெரிவித்துள்ளது.

Updated On : 1 நவம்பர் 2025, 6:26 pm IST
அசோக் லேலண்ட் - கோப்புப் படம்
பகிர்:

புதுதில்லி: வணிக வாகன தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலேண்ட், அக்டோபர் மாதம் அதன் மொத்த விற்பனை 16% அதிகரித்து 17,820 ஆக உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுவே கடந்த வருடம் இதே மாதத்தில் இது 15,310 ஆக இருந்தது.

உள்நாட்டு விற்பனை 16% அதிகரித்து 16,314 வாகனங்களாக உயர்ந்துள்ள நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இது 14,067 ஆக இருந்தது.

உள்நாட்டு சந்தையில் நடுத்தர மற்றும் கனரக வணிக வாகனங்களின் விற்பனை 9,611 ஆக இருந்தது. இதுவே கடந்த ஆண்டு, இதே காலத்தில் இது 8,437 ஆக இருந்தது. இது 14% வளர்ச்சியாகும்.

Advertisement

Advertisement

உள்நாட்டு சந்தையில் இலகுரக வணிக வாகன விற்பனை கடந்த ஆண்டு இதே காலத்தில் 5,630 ஆக இருந்த நிலையில், கடந்த மாதம் இது 6,703 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிக்க: நிசான் மோட்டார் இந்தியா விற்பனை உயர்வு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.