வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச் சந்தைகள் சரிவில் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 83,835.10 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை கடும் சரிவைச் சந்தித்தது. பின்னர் சற்று ஏற்றமடைந்த நிலையில் தற்போது நிலையான வர்த்தகத்தில் இருக்கிறது.
காலை 11.40 மணியளவில் சென்செக்ஸ் 18.32 புள்ளிகள் குறைந்து 83,920.39 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 8.45 புள்ளிகள் உயர்ந்து 25,730.55 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
சென்செக்ஸ் பங்குகளில், மாருதி சுசுகி, பாரத் எலக்ட்ரானிக்ஸ், டைட்டன், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் ஆகியவை அதிக நஷ்டத்தைச் சந்தித்தன.
அதேநேரத்தில் மஹிந்திரா & மஹிந்திரா, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
பொதுத்துறை வங்கி பங்குகள் உயர்வடைந்த நிலையில் நுகர்வோர் பொருள்கள், ஐடி துறைகள் சரிவில் உள்ளன.
பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் சற்று உயர்வுடன் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.