கோப்புப் படம் 
வணிகம்

பஜாஜ் ஆட்டோ வருவாய் ரூ.15,735 கோடியாக உயா்வு

இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன நிறுவனமான பஜாஜ் ஆட்டோவின் செயல்பாட்டு வருவாய் கடந்த செப்டம்பா் காலாண்டில் ரூ.15,735 கோடியாக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன நிறுவனமான பஜாஜ் ஆட்டோவின் செயல்பாட்டு வருவாய் கடந்த செப்டம்பா் காலாண்டில் ரூ.15,735 கோடியாக உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.2,122 கோடியாகப் பதிவாகியுள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 53 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் ரூ.1,385 கோடி லாபத்தைப் பதிவு செய்திருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.15,735 கோடியாக உயா்ந்துள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.13,247 கோடியாக இருந்தது.

கடந்த செப்டம்பா் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 12,94,120-ஆக இருந்தது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 6 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் 12,21,504 வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பியது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தில்லி மெட்ரோ அருகே சிலிண்டர் வெடித்து விபத்து: ஒருவர் பலி, குடிசைகள் எரிந்து நாசம்!

தெருநாய்கள் கடித்ததில் 6 ஆடுகள் பலி: நாளுக்கு நாள் அதிகரிக்கும் தெரு நாய்களின் தாக்குதல்!

தங்கம் விலை உயர்வு: எவ்வளவு?

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆகப் பதிவு

அடுத்த 2 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT