பிசி ஜுவல்லர் லிமிடெட் - கோப்புப் படம் 
வணிகம்

பிசி ஜுவல்லர் 2-வது காலாண்டு லாபம் 17% உயர்வு!

செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த 2-வது காலாண்டில் பிசி ஜுவல்லர் லிமிடெட் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 17% அதிகரித்து ரூ.209.54 கோடியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

புதுதில்லி: செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த 2-வது காலாண்டில் பிசி ஜுவல்லர் லிமிடெட் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 17% அதிகரித்து ரூ.209.54 கோடியாக இருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அதன் நிகர லாபம் ரூ.178.88 கோடியாக இருந்தது.

இந்த நிதியாண்டின் 2-வது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் 63% அதிகரித்து ரூ.894.93 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது ரூ.548.54 கோடியாக இருந்தது.

வரிக்குப் பிந்தைய செயல்பாட்டு லாபம், மதிப்பாய்வு செய்யப்பட்ட காலத்தில் ரூ.102 கோடியாக இருந்த நிலையில், இது கிட்டத்தட்ட இரண்டு மடங்காக அதிகரித்து ரூ.202.5 கோடியாக உள்ளது.

புதுதில்லியை தளமாகக் கொண்ட பிசி ஜுவல்லர் நிறுவனத்திற்கு 50க்கும் மேற்பட்ட ஷோரூம்கள் தன்வசம் உள்ள நிலையில் அவை பெரும்பாலும் நிறுவனத்திற்குச் சொந்தமானவை என்றது.

2024-25 நிதியாண்டில், பிசி ஜுவல்லர் ரூ.577.70 கோடி நிகர லாபத்தையும், ரூ.2,371.87 கோடி மொத்த வருவாயையும் ஈட்டியுள்ளது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ.88.57 ஆக நிறைவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜோ ரூட் அரைசதம்; இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

பாகிஸ்தானில் திருமண நிகழ்வில் தற்கொலைப் படைத் தாக்குதல்: 7 பேர் பலி

ஈரானிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் இந்திய மாணவர்கள்: அரசு உதவ கோரிக்கை!

சத்தீஸ்கரில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கை: வெடிபொருட்கள், ஜெலட்டின் குச்சிகள் மீட்பு

இந்தியா மீதான 25% கூடுதல் வரி நீக்கப்படும்? - அமெரிக்கா சூசகம்!

SCROLL FOR NEXT