இந்த வாரத்தில் 4-வது நாளாக இன்றும்(வியாழக்கிழமை) பங்குச் சந்தை வர்த்தகம் உயர்வுடன் நிறைவு பெற்றுள்ளது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 84,525.89 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை ஏற்றத்துடன் வர்த்தகமானது.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 12.16 புள்ளிகள் உயர்ந்து 84,478.67 புள்ளிகளில் நிலை பெற்றது.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, வர்த்தக நேர முடிவில் 3.35 புள்ளிகள் உயர்ந்து 25,879.15 புள்ளிகளில் நிறைவு பெற்றது.
துறைகளில், உலோகம், ரியல் எஸ்டேட், மீடியா 0.5 முதல் 1 சதவீதம் வரை உயர்ந்தன, அதே நேரத்தில் ஐடி, எஃப்எம்சிஜி தலா 0.3 சதவீதம் சரிந்தன.
பிஎஸ்இ மிட்கேப் 0.4%, ஸ்மால்கேப் 0.7% உயர்ந்தன. ரியாலிட்டி தவிர மற்ற அனைத்து துறைகளும் ஆட்டோ, மீடியா, டெலிகாம், ஐடி, நுகர்வோர் பொருள்கள் ஆகிய குறியீடுகள் 1 முதல் 2% வரை உயர்ந்தன.
ஐசிஐசிஐ வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், பவர் கிரிட், எல்&டி, பஜாஜ் பின்சர்வ் ஆகியவை சென்செக்ஸில் ஏற்றம் கண்டன.
அதேநேரத்தில் ரிலையன்ஸ், கோட்டக் வங்கி, டைட்டன், ஹெச்டிஎஃப்சி, எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.
ஷாங்காய், ஹாங்காங், தென் கொரியா, ஜப்பான் பங்குச்சந்தைகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகின,
ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 0.29% குறைந்து 62.53 டாலராக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.