வியர்பட்ஸ் ஸ்மார்ட் வாட்ச்  Photo: watchoutwearables.com
வணிகம்

ஜென் ஸி-க்காக...! இயர்பட்ஸுடன் ஒருங்கிணைந்த ஸ்மார்ட் வாட்ச்!

வியர்பட்ஸ் ஸ்மார்ட் வாட்ச் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

இயர்பட்ஸுடன் ஒருங்கிணைந்த ஸ்மார்ட் வாட்சை வாட்ச் அவுட் நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

ஜென் ஸி மற்றும் இளைஞர்களின் அன்றாட அத்தியாவசியப் பொருள்களாக ஸ்மார்ட் வாட்சும், இயர்பட்ஸும் மாறியுள்ளது. இந்த இரண்டும் இல்லாத இளைஞர்களைக் காண்பது அரிது.

இந்த நிலையில், வாட்ச் அவுட் என்ற ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பு நிறுவனம், இயர்பட்ஸுடன் கூடிய வியர்பட்ஸ் ஸ்மார்ட் வாட்சை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

பல கேட்ஜெட்டுகளை சுமந்து சென்று, அதனைப் பாதுகாப்பாக மீண்டும் வீட்டுக்கு கொண்டுவந்து சேர்க்கும் சிரமத்தை குறைக்கும் வகையில், ஸ்மார்ட் வாட்சுக்குள் அடங்கும் வகையிலான ப்ளூ டூத் இயர்பட்ஸை அறிமுகம் செய்துள்ளனர்.

ஸ்மார்ட் வாட்சின் அடிப்பகுதியில் இருக்கும் இயர்பட்ஸை நமது தேவைக்கு ஏற்ப பயன்படுத்திவிட்டு, மீண்டும் ஸ்மார்ட் வாட்சில் வைத்துவிடலாம்.

இதிலும், மற்ற ஸ்மார்ட் வாட்சைப் போலவே, நமது உடல் ஆரோக்கிய கணக்கீடு, தொலைப்பேசி அழைப்பு, குறுஞ்செய்தி உள்ளிட்ட அம்சங்கள் இருக்கின்றன.

மேலும், 4 ஜிபி சேமிப்பு திறன் கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பப்பட்ட பாடல்களை ஸ்மார்ட் வாட்சில் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள முடியும்.

இதன் விலை ரூ. 3,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

WearPods Smartwatch with inbuilt ear buds for GenZ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடைசி டி20: மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி தொடரை வென்ற நியூசிலாந்து!

எடியூரப்பா மீதான போக்ஸோ வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!

தலைவர் - 173 புதிய இயக்குநர் யார்?

ஜார்ஜியா விமான விபத்து! துருக்கியின் ராணுவ சரக்கு விமானங்கள் பறக்கத் தடை!

தில்லி குண்டு வெடிப்பு! புல்வாமா தாக்குதல் அமைப்புடன் பெண் மருத்துவருக்கு தொடர்பா?

SCROLL FOR NEXT