வணிகம்

பிகார் தேர்தல் முடிவுகள் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் நிறைவு!

சென்செக்ஸ் 84.11 புள்ளிகள் உயர்ந்து 84,562.78 புள்ளிகளாகவும், நிஃப்டி 30.90 புள்ளிகள் உயர்ந்து 25,910.05 புள்ளிகளாக நிலைபெற்றது.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: பிகார் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி 50 தொடர்ந்து 4-வது நாளாக தனது வெற்றி ஓட்டத்தை நீட்டித்தது, சென்செக்ஸ் 84.11 புள்ளிகள் உயர்ந்து 84,562.78 புள்ளிகளாகவும் நிஃப்டி 30.90 புள்ளிகள் உயர்ந்து 25,910.05 புள்ளிகளாக நிலைபெற்றது.

பெரும்பாலான அமர்வில் சரிந்து வர்த்தகமான நிலையில், இறுதி வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் உயர்ந்து முடிவடைந்தன.

பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அபார பெரும்பான்மையை பெற்றதையடுத்து, பெரும்பாலான எக்ஸிட் போல் கணிப்புகளை மிஞ்சிய நிலையில் இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இது வெகுவாக அதிகரித்தது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் 30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீடு 449.35 புள்ளிகள் சரிந்து 84,029.32 புள்ளிகளாகவும், நிஃப்டி 138.35 புள்ளிகள் சரிந்து 25,740.80 புள்ளிகளாக வர்த்தகத்தைத் தொடங்கியது. இருப்பினும், இரண்டு குறியீடுகளும் வர்த்தக இறுதியில் சிறிதளவு உயர்ந்து, தொடர்ந்து 4-வது நாளாக ஏற்றத்துடன் முடிவடைந்தன.

சென்செக்ஸில் இன்று எடர்னல், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், டிரென்ட், ஆக்சிஸ் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், சன் பார்மாசூட்டிகல்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், அதானி போர்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐடிசி, பவர் கிரிட், டாடா மோட்டார்ஸ் லிமிடெட் வணிக வாகன வணிகம் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் அதே வேளையில் இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, டெக் மஹிந்திரா, டைட்டன், அல்ட்ராடெக் சிமென்ட், மாருதி சுசுகி இந்தியா மற்றும் லார்சன் & டூப்ரோ ஆகியவை பங்குகள் சரிந்து முடிவடைந்தன.

இதனையடுத்து, முதலீட்டாளர்கள் வரவிருக்கும் ரிசர்வ் வங்கியின் - நாணயக் கொள்கைக் குழு மற்றும் அமெரிக்க அமெரிக்க பெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி ஆதியவற்றில் கவனம் செலுத்தத் தொடங்யுள்ளனர்.

ஆசிய சந்தைகளில், தென் கொரியா கோஸ்பி, ஹாங்காங் ஹேங் செங், ஜப்பான் நிக்கி 225 மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு ஆகியவை சரிவுடன் முடிவடைந்தன.

ஐரோப்பிய சந்தைகள் பெரும்பாலும் சரிவுடன் வர்த்தகமான நிலையில் அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) பெரும்பாலும் சரிவுடன் முடிவடைந்தன.

அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ச்சியாக 4-வது நாளாக விற்பனையாளர்களாக இருந்து, நேற்று மற்றும் ரூ.383.68 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ள நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.3,091.87 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய், பீப்பாய்க்கு 1.51% உயர்ந்து 63.93 அமெரிக்க டாலராக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்த தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி!

பிகாரில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி!- நேரலை

தேர்தல் ஆணையம் மீதான மக்களின் நம்பிக்கை வலிமை பெற்றுள்ளது: பிகார் வெற்றி குறித்து பிரதமர் பேச்சு!

டிஷ் டிவியின் Q2 நிகர இழப்பு ரூ.132.65 கோடியாக உயர்வு!

15 சிக்ஸர்கள் விளாசல்; 2-வது அதிவேக சதம் விளாசி வைபவ் சூர்யவன்ஷி சாதனை!

SCROLL FOR NEXT