வாரத்தின் கடைசி நாளான இன்று(வெள்ளிக்கிழமை) பங்குச் சந்தைகள் கடும் சரிவில் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 84,060.14 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.25 மணியளவில் சென்செக்ஸ் 233.20 புள்ளிகள் குறைந்து 84,249.00 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 61.25 புள்ளிகள் குறைந்து 25,817.90 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
மீடியா, பொதுத்துறை வங்கி, பார்மா பங்குகள் முன்னேறி வரும் அதே நேரத்தில் ஐடி, உலோகம், ஆட்டோ பங்குகள் சரிந்து வருகின்றன.
மிட்கேப் குறியீடு 0.21% உயர்ந்தும் ஸ்மால்-கேப் குறியீடு 0.04% சரிந்தும் வர்த்தமாகிறது.
சென்செக்ஸ் நிறுவனங்களில், டாடா மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ், டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா, எச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஐசிஐசிஐ வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஐடிசி, எச்.டி.எஃப்.சி. வங்கி, மாருதி சுசுகி இந்தியா, லார்சன் & டூப்ரோ மற்றும் பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிந்து வருகின்றன.
எட்டர்னல், ஆக்சிஸ் வங்கி, சன் பார்மா, எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.