வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.
இன்றைய வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 388.17 புள்ளிகள் உயர்ந்து 84,950.95 என்ற நிலையில் நிறைவடைந்தது. அதேபோல நிஃப்டி 103.40 புள்ளிகள் உயர்ந்து 26,013.45 புள்ளிகளாக இன்று நிலைபெற்றது.
இன்றைய பங்குச்சந்தையின் ஏற்றத்துக்கு பிகார் தேர்தல்தான் காரணம் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். பிகார் தேர்தலின் முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், அதன்பின்னர் இன்றுதான் பங்குச்சந்தை வர்த்தகமானது.
பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்ற நிலையில், மத்திய அரசின் நிலைத்தன்மை அதிகரிக்கும் என்ற நிலையில் இன்றைய பங்குச்சந்தை நேர்மறையில் வர்த்தகமானது என்று கூறுகிறார்கள்.
இதையும் படிக்க: அந்நியச் செலாவணி கையிருப்பு 68,703 கோடி டாலராகச் சரிவு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.