விவோ எக்ஸ் 300 ப்ரோ படம் / நன்றி - விவோ
வணிகம்

புதிய ஓஎஸ் உடன் டிச. 2-ல் அறிமுகமாகிறது விவோ எக்ஸ் 300!

விவோ எக்ஸ் 300 உடன் விவோ எக்ஸ் 300 ப்ரோ ஸ்மார்ட்போனும் அறிமுகமாகிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

விவோ எக்ஸ் 300 ஸ்மார்ட்போன் டிச. 2 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவோ எக்ஸ் 300 உடன் விவோ எக்ஸ் 300 ப்ரோ ஸ்மார்ட்போனும் அறிமுகமாகிறது.

புராசஸர் மற்றும் ஆன்ட்ராய்டு ஆகியவை மேம்பட்ட தரத்தில் இருக்கும் என விவோ குறிப்பிட்டுள்ளது.

விவோ எக்ஸ் 200 வரிசை ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு டிசம்பரில் அறிமுகமான நிலையில், விவோ எக்ஸ் 300 இந்த ஆண்டு டிசம்பரில் அறிமுகமாகின்றன.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விவோ நிறுவனம், இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது.

அந்தவகையில் தற்போது விவோ எக்ஸ் 300 வரிசையில் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகவுள்ளன. இந்த இரு ஸ்மார்ட்போன்களுமே சீனாவில் ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

இதன்படி, சீனாவில் அறிமுகமான விவோ எக்ஸ் 300 வரிசை ஸ்மார்ட்போன்களில் உள்ள சிறப்பம்சங்கள் சற்று மேம்படுத்தப்பட்டு இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி மீடியாடெக் டைமன்சிட்டி புராசஸர் இருக்கும். ஆன்டிராய்டு 16 அடிப்படையாகக் கொண்ட ஓரிஜின் ஓஎஸ் கொண்டிருக்கும். விவோ எக்ஸ் 300 ப்ரோ ஸ்மார்ட்போனில் 200MP டெலிபோட்டோ சென்சார் இருக்கும்.

மின்னணு சாதனங்களை அதிகம் விரும்புவோர் ஓரிஜின் ஓஎஸ் பயன்பாட்டை அறிந்துகொள்வதற்காகவே எதிர்பார்ப்புடன் உள்ளனர். நவ. 26ஆம் தேதி அறிமுகமாகும் ஐகியூ 15 ஸ்மார்ட்போனிலும் ஓரிஜின் ஓஎஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுப்பதற்காகவே புதிய இயங்குதளத்தை (ஓஎஸ்) ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவர் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் Q2 லாபம் 21% உயர்வு!

குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 474 மனுக்கள் அளிப்பு

பகல் கனவில் மூழ்கினேன்... ஆராதனா!

பொன்மேனி உருகுதே... அங்கிதா சர்மா!

3-வது முறையாக சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாகும் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT