எம்வீ ஃபோட்டோ வாலாட்டிக் பவர் லிமிடெட்  
வணிகம்

அறிமுகமான நாளில் எம்வீ ஃபோட்டோ வாலாட்டிக் பங்குகள் 1% உயர்வு!

பங்குச் சந்தையில் இன்று அறிமுகமான நிலையில், எம்வீ ஃபோட்டோ வாலாட்டிக் பவர் பங்குகள் அதன் வெளியீட்டு விலையான ரூ.217 உடன் ஒப்பிடும்போது 1 சதவிகிதத்திற்கும் மேலாக சென்று முடிந்தன.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: பங்குச் சந்தையில் இன்று அறிமுகமான நிலையில், எம்வீ ஃபோட்டோ வாலாட்டிக் பவர் பங்குகள் அதன் வெளியீட்டு விலையான ரூ.217 உடன் ஒப்பிடும்போது 1 சதவிகிதத்திற்கும் மேலாக சென்று முடிவடைந்தன.

பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ-யில் எம்வீ ஃபோட்டோ வாலாட்டிக் பவர் லிமிடெட் பங்குகள் தலா ரூ.217ஆக பட்டியலிடப்பட்டது.

இன்றைய வர்த்தகத்தில், நிறுவனத்தின் பங்கு அதிகபட்சமாக ரூ.227.80 ஆகவும், பிறகு குறைந்தபட்சமாக ரூ.206.85 ஆக சென்றது. இறுதியாக 0.94% அதிகரித்து ரூ.219.05 ஆக முடிவடைந்தது.

என்எஸ்இ-யில், பங்கின் விலை ரூ.219.40 ஆக முடிவடைந்த நிலையில், இது 1.10% பிரீமியமாகும். அதே வேளையில் நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு ரூ.15,165.82 கோடியாக இருந்தது.

கடந்த வாரம் ஐபிஒ இறுதி நாளில், எம்வீ ஃபோட்டோ வாலாட்டிக் பவர் லிமிடெட் 97% சந்தாவைப் பெற்றது.

ரூ.2,900 கோடி மதிப்புள்ள ஐபிஓ-வில், ஒரு பங்கின் விலை ரூ.206 முதல் ரூ.217 என்ற விலை வரம்பைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையில், பிசிக்ஸ்வல்லா இன்று இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிட்டது. சுமார் 33% பிரீமியத்துடன் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், ரூ.145 ஆக வர்த்கம் தொடங்கியது. பிறகு 8% அதிகரித்து ரூ.156.49 ஆக வர்த்தகமானது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் குறைந்து ரூ.88.61ஆக நிறைவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ப்ரண்ட்ஸ் டிரெய்லர்!

துரந்தர் டிரெய்லர்!

கோவை வருகை: தமிழில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி!

தில்லியைப் போல தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி? ஜம்மு-காஷ்மீரில் உஷார் நிலை!

ஸ்பிக் நிறுவனத்தின் Q2 லாபம் ரூ.53.10 கோடி!

SCROLL FOR NEXT