இந்தியாவில் மினி நிறுவனம் தனது புதிய எஸ்.இ. ஆல்4 எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது.
இந்த கார் வெறும் 5.6 நொடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் என்றும் அதிகபட்சமாக மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
டூயல் எலக்ட்ரிக் மோட்டார்கள் கொண்ட இந்த காரில் 66.45 கிலோவாட் ஹவர் பேட்டரி இடம்பெற்றுள்ளது.
அதிகபட்சமாக 313 எச்.பி. பவரையும், 494 என்.எம். டார்க்கையும் இந்த கார் வெளிப்படுத்தும்.
ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 440 கி.மீ. வரை பயணிக்க முடியும்.
டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் (130 கிலோவாட்) மூலம் 29 நிமிடங்களில் 10 முதல் 80 சதவிகிதம் சார்ஜ் ஏற்ற முடியும். அதேநேரத்தில், 22 கிலோவாட் ஏசி சார்ஜர் மூலம் பேட்டரியை முழுமையாக 3.45 மணிநேரத்தில் சார்ஜ் ஏற்றலாம்.
பனோரமிக் சன்ரூஃப், வட்ட வடிவிலான ஓஎல்இடி டிஸ்பிளே, வயர்லெஸ் போன் மிரரிங், க்ரூஸ் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட சிறப்பம்சங்கள் உள்ளன.
பாதுகாப்பு அம்சத்தைப் பொறுத்தவரை மல்டிபிள் ஏர் பேக், டயர் அழுத்தம் கண்காணிப்பு அமைப்பு உள்ளிட்டவை உள்ளன.
விலை
இந்திய சந்தையில் ரூ. 66.9 லட்சத்துக்கு விற்பனைக்கு வந்துள்ள இந்த கார், தற்போது முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.