புதுதில்லி: வாரீ எனர்ஜிஸ் நிறுவனத்தின் அலுவலகங்களை வருமான வரி அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக நிறுவனம் கூறியதையடுத்து அதன் பங்குகள் 3 சதவிகிதத்திற்கும் மேல் சரிந்தன.
பிஎஸ்இ-யில் அதன் பங்குகள் 3.29 சதவிகிதம் சரிந்து ரூ.3,175.10 ஆக வர்த்தகமான நிலையில் பகலில் அது 6 சதவிகிதம் சரிந்து ரூ.3,085 ஆக இருந்தது. என்எஸ்இ-யில் அதன் பங்குகள் 3.27 சதவிகிதம் சரிந்து ரூ.3,174.40 ஆக இருந்தது.
நிறுவனமானது ஐடி அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி வருவதாக அதன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: ஏ.டபிள்யூ.எல். அக்ரி பிசினஸ் பங்குகளை வில்மருக்கு விற்பனை செய்த அதானி குழுமம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.