3 நாள்களுக்குப் பிறகு பங்குச் சந்தைகள் இன்று(புதன்கிழமை) உயர்வுடன் நிறைவு பெற்றுள்ளன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 84,503.44 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் உயர்வுடன் வர்த்தகமானது.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 1,022.50 புள்ளிகள் உயர்ந்து 85,609.51 புள்ளிகளில் நிலை பெற்றது.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, வர்த்தக நேர முடிவில் 320.50 புள்ளிகள் உயர்ந்து 26,205.30 புள்ளிகளில் நிறைவு பெற்றது. 26,000 புள்ளிகளைக் கடந்து நிஃப்டி மீண்டும் சாதனை படைத்துள்ளது.
சென்செக்ஸ் 30 பங்குகளில் பஜாஜ் பின்சர்வ், ரிலையன்ஸ், சன் பார்மா, டாடா ஸ்டீல் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் இன்று கணிசமாக உயர்ந்தன.
ஏசியன் பெயிண்ட்ஸ், பாரத் ஏர்டெல் நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்துள்ளன.
அதேபோல துறைகள் வாரியாக அனைத்துத் துறை குறியீடுகளும் ஏற்றத்தில் வர்த்தகமாகின.
அதிகபட்சமாக நிஃப்டி மெட்டல் 2.06 சதவீதம் உயர்ந்தது. தொடர்ந்து நிஃப்டி நுகர்வோர் சாதனங்கள் 1.75 சதவீதம், நிஃப்டி எனர்ஜி 1.74 சதவீதம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
நிஃப்டி மிட்கேப் 100 மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடுகள் முறையே 1.27 சதவீதம் மற்றும் 1.36 சதவீதம் உயர்ந்து முடிவடைந்தன.
சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டாளர்கள் லாபமடைந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.