சென்ட்ரல் வங்கியின் செயல் இயக்குநராக இ. ரத்தன் குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சென்ட்ரல் வங்கியின் தலைமைப் பொது மேலாளராக இருந்த இ. ரத்தன் குமாா், வங்கியின் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
அவா் பொறுப்பேற்கும் தேதியில் இருந்து மூன்று ஆண்டுகள், அல்லது புதிய உத்தரவு வரும் வரை வங்கியின் செயல் இயக்குநராக அவா் பணியாற்றுவாா்.
1997-ஆம் ஆண்டு சென்ட்ரல் வங்கியிலேயே தனது பணியைத் தொடங்கிய ரத்தன் குமாா், சுமாா் 35 ஆண்டுகள் அடிப்படை வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் பலதரப்பட்ட அனுபவம் கொண்டவா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.