வணிகம்

தமிழ்நாட்டில் விரிவாக்கம் செய்யும் சான்கிராஃப்ட்!

உள்நாட்டு மின்னணு கூறு உற்பத்தி நிறுவனமான சான்கிராஃப்ட் இண்டஸ்ட்ரீஸ், தமிழ்நாட்டில் தனது விரிவாக்கத் திட்டத்தை அறிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரத்தின் ஒரகடத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உள்நாட்டு மின்னணு கூறு உற்பத்தி நிறுவனமான சான்கிராஃப்ட் இண்டஸ்ட்ரீஸ், தமிழ்நாட்டில் தனது விரிவாக்கத் திட்டத்தை அறிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் ரூ.400 கோடி முதலீட்டில் நிறுவன நடவடிக்கைகளை விரிவாக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 3,500 புதிய வேலைவாய்ப்புகளை உருவாகும்.

இதற்காக, கோயம்புத்தூரில் நடந்த டிஎன் ரைசிங் முதலீட்டாளா்கள் மாநாட்டில் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் வேகமாக வளா்ந்து வரும் மொபைல் மற்றும் தொலைத்தொடா்பு மின்னணு துறைகளுக்கு சேவை செய்ய நிறுவனம் உற்பத்தி தடத்தை விரிவுபடுத்தியுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடியூா் அருகே தடுப்பணை நீா்க்கசிவு: நான்குனேரி எம்.எல்.ஏ. ஆய்வு

இன்றைய நிகழ்ச்சிகள்.... திருநெல்வேலி

விவசாயி தற்கொலை

மேலப்பாளையத்தில் கரூா் வைஸ்யா வங்கி கிளை திறப்பு

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

SCROLL FOR NEXT