கோப்புப்படம் IANS
வணிகம்

புதிய உச்சத்தை எட்டிய சென்செக்ஸ், நிஃப்டி! பங்குச் சந்தை உயர்வுடன் முடிவு!!

இன்றைய பங்குச் சந்தை வர்த்தகம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

தொடர்ந்து 2-வது நாளாக பங்குச் சந்தைகள் இன்று(வியாழக்கிழமை) உயர்வுடன் நிறைவு பெற்றுள்ளன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 85,745.05 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் உயர்வுடன் வர்த்தகமானது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 110.88 புள்ளிகள் உயர்ந்து 85,720.38 புள்ளிகளில் நிலை பெற்றது.

தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, வர்த்தக நேர முடிவில் 10.25 புள்ளிகள் உயர்ந்து 26,215.55 புள்ளிகளில் நிறைவு பெற்றது. 26,200 புள்ளிகளைக் கடந்து நிஃப்டி மீண்டும் சாதனை படைத்துள்ளது.

சென்செக்ஸ் முதல்முறையாக 86,000 புள்ளிகளைக் கடந்தும் நிஃப்டி 14 மாதங்களுக்குப் பிறகு புதிய உச்சத்தையும் எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிஃப்டி மிட்கேப் நேர்மறையாக சற்றே உயர்வுடன் முடிந்தது. அதேநேரத்தில் நிஃப்டி ஸ்மால்கேப் 0.53 சதவீதம் சரிந்தது.

சென்செக்ஸில் பஜாஜ் நிறுவனங்கள், ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், எச்சிஎல் டெக் ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாகும்.

எடர்னல், மாருதி சுசுகி, அல்ட்ராடெக் சிமென்ட், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

நிஃப்டி ஐடி, தனியார் வங்கிகள் முறையே 0.22%, 0.34%உயர்ந்தன. நிஃப்டி பொதுத்துறை வங்கி 0.58%, ரியல் எஸ்டேட் 0.72%, நிஃப்டி ஆயில் & கேஸ் 0.73% சரிந்தன.

ஆசிய பங்குச்சந்தைகளும் இன்று நேர்மறையில் வர்த்தகமாகின. அமெரிக்க பங்குச்சந்தைகளும் நேற்று நேர்மறையில் நிறைவு பெற்றுள்ளன.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 பைசா குறைந்து 89.30 ஆக உள்ளது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 63.10 டாலராக இருக்கிறது.

அமெரிக்க பெடரல் வட்டி விகித குறைப்பு, இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தை, வெளிநாட்டு முதலீடு அதிகரிப்பு ஆகியவற்றால் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sensex, Nifty scale record highs on rate cut hopes, foreign fund inflows

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தானுக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

எஸ்ஐஆர் படிவம்! முழுமையாக பூர்த்தி செய்யாவிட்டாலும் நிராகரிக்கப்படாது: அர்ச்சனா பட்நாயக்

பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே புதிய பாடல்!

முதல் டி20: ஹாரி டெக்டார் அரைசதம் விளாசல்; வங்கதேசத்துக்கு 182 ரன்கள் இலக்கு!

வாழ்க்கை இப்போது... மீரா ஜாஸ்மின்!

SCROLL FOR NEXT