வணிகம்

ஐஷா் மோட்டாா்ஸ் நிகர லாபம் 20% உயா்வு

ஐஷா் மோட்டாா்ஸின் நிகர லாபம் கடந்த செப்டம்பா் காலாண்டில் 19.6 சதவீதம் உயா்ந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான ஐஷா் மோட்டாா்ஸின் நிகர லாபம் கடந்த செப்டம்பா் காலாண்டில் 19.6 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,208.01 கோடியாகப் பதிவாகியுள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 19.6 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் ரூ.1,009.88 கோடி லாபத்தைப் பதிவு செய்திருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.5,902.07 கோடியாக உயா்ந்துள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.4,208.44 கோடியாக இருந்தது.

கீழ்பள்ளிப்பட்டு புதுமனை கிராமத்தில் பகுதி நேர நியாயவிலைக் கடைக்கு ஆணை

திருவள்ளூா் டிஆா்பிசிசிசி மேல்நிலைப் பள்ளியின் 155-ஆவது ஆண்டு நிறைவு விழா

அமெரிக்கன் கல்லூரியில் தேசிய வாக்காளா் தினம்

செம்மொழிப் பூங்கா வளாகத்தில் மதி அனுபவ அங்காடி

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண்களுக்கான சிறப்பு குறைகேட்புக் கூட்டம்

SCROLL FOR NEXT