மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் 
வணிகம்

மாருதி சுசுகியின் உற்பத்தி 26% உயர்வு!

சந்தை தேவையை பூர்த்தி செய்ய, வாகனத்தின் உற்பத்தியை அதிகரித்ததால், செப்டம்பர் மாதம் மாருதி சுசுகி இந்தியாவின் உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு 26% அதிகரித்துள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: சந்தை தேவையை பூர்த்தி செய்ய, வாகனத்தின் உற்பத்தியை அதிகரித்ததால், செப்டம்பர் மாதம் மாருதி சுசுகி இந்தியாவின் உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு 26% அதிகரித்துள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி கடந்த மாதம் நாடு முழுவதும் சுமார் 2,01,915 கார்களை உற்பத்தி செய்தது. இதுவே செப்டம்பர் 2024ல் இது 1,59,743 கார்களாக இருந்தது.

கடந்த மாதம் 12,318 ஆல்டோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோ கார்களை உற்பத்தி செய்த நிலையில், அதன் முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது 12,155 கார்களாக இருந்தது.

பலேனோ, செலெரியோ, டிசையர் மற்றும் ஸ்விஃப்ட் உள்ளிட்ட சிறிய கார்களின் உற்பத்தியை செப்டம்பர் மாதம் 93,301 கார்களாக அதிகரித்தது. இதுவே கடந்த ஆண்டில் இதே மாதத்தில் இது 68,413 கார்களாக இருந்தது.

கடந்த மாதம் சியாஸின் உற்பத்தி எதுவும் இல்லை என்றாலும் கடந்த ஆண்டு செப்டம்பரில் 1,687 நடுத்தர அளவிலான செடானை விற்பனைக்கு அனுப்பி வைத்தது.

பிரெஸ்ஸா, எர்டிகா மற்றும் ஃபிராங்க்ஸ் போன்ற பயன்பாட்டு வாகனங்களின் உற்பத்தி ஆண்டுக்கு ஆண்டு 27 சதவிகிதம் உயர்ந்து 79,496 கார்களாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் 62,752 கார்களை உற்பத்தி செய்திருந்தது. ஈகோ வாகன உற்பத்தி கடந்த ஆண்டு செப்டம்பரில் 11,702 வாகனங்களிலிருந்து 13,201 வாகனங்களாக உயர்ந்துள்ளது.

சூப்பர் கேரி எல்சிவி உற்பத்தி கடந்த ஆண்டு இதே காலத்தில் 3,034 கார்களாக இருந்த நிலையில், கடந்த மாதம் அது 3,599 கார்களாக அதிகரித்துள்ளது.

இந்த வார தொடக்கத்தில், மாருதி சுசுகி மொத்த விற்பனையில் ஆண்டுக்கு ஆண்டு 3 சதவிகிதம் அதிகரித்து செப்டம்பரில் 1,89,665 கார்களாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.88.78 ஆக நிறைவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளை மனம்... மேகா!

உருகும் அழகில்... ப்ரீத்தி!

தென்நாடு பாடல்!

ராமராக ராகுல்; ராவணனாக அமலாக்கத்துறை..! உ.பி.யில் காங். வெளியிட்ட கேலிச்சித்திரம்!

69 ரன்களில் சுருண்ட தென்னாப்பிரிக்கா; இங்கிலாந்து அபார வெற்றி!

SCROLL FOR NEXT