வெள்ளி விலை நிலவரம் 
வணிகம்

2 நாள்களில் ரூ.10 உயர்ந்த வெள்ளி! தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

2 நாள்களில் ரூ.10 உயர்ந்து, வெள்ளி விலை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

தங்கம் விலை நாள்தோறும் உயர்ந்து, எட்டாக்கனியாக மாறிவிட்ட நிலையில், வெள்ளி விலையும் மக்களுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதுவரை சில காசுகள் மட்டுமே உயர்ந்து வந்த வெள்ளி விலை தற்போது கடுமையான உயர்வை சந்தித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத வகையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.7 உயர்ந்து விற்பனையான நிலையில், இன்று மீண்டும் ரூ.3 உயர்ந்து உச்சத்தைத் தொட்டுள்ளது.

தங்கம் விலை நேற்று சற்றுக் குறைந்த நிலையில், இன்று மீண்டும் உயர்வை சந்தித்து விட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.85 உயர்ந்து, ரூ.11,425க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,400க்கும் விற்பனையாகி வருகிறது.

தங்கம் விலை ஒருபக்கம் உயர்ந்து வருவதற்கு ஈடாக வெள்ளியும் கடும் போட்டியில் ஈடுபட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை இன்று 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.187க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளிக்கிழமை நிலவரம்..

கடந்த சில நாள்களாக காலை, மாலை என இரு நேரங்களில் தங்கம் விலை மாற்றமடைந்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்து ரூ. 90,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.165 குறைந்து ரூ. 11,260-க்கு விற்பனையானது.

இந்த விலைக் குறைவு அதிக நேரம் நீடிக்கவில்லை. மீண்டும் மாலையில், ஆபரணத் தங்கம் விலை சவரன் ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,720க்கு விற்பனையானது. ஒரு கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.11,340க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT