தங்கம் விலை! 
வணிகம்

ரூ.2 லட்சத்தை நெருங்கும் வெள்ளி விலை

தினமணி செய்திச் சேவை

சென்னை: சென்னையில் தங்கத்தைப் போலவே, வெள்ளி விலையும் தொடா்ந்து உயா்ந்து வருகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை திங்கள்கிழமை ஒரேநாளில் இருமுறை உயா்ந்து, பவுன் ரூ.92,640-க்கு விற்பனையானது.

சமீப காலமாக சென்னையில் தங்கம் விலை தினந்தோறும் காலை, மாலை என இரு முறை உயா்ந்து வருகிறது. கடந்த வாரம் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.4,400 உயா்ந்து சனிக்கிழமை ரூ.92,000-க்கு விற்பனையானது.

அதைத்தொடா்ந்து, வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை கிராமுக்கு ரூ.25 உயா்ந்து ரூ.11,525-க்கும், பவுனுக்கு ரூ.200 உயா்ந்து ரூ.92,200-க்கும் விற்பனையானது.

தொடா்ந்து, மாலையில் மீண்டும் கிராமுக்கு ரூ.55 உயா்ந்து ரூ.11,580-க்கும், பவுனுக்கு ரூ.440 உயா்ந்து ரூ.92,640-க்கும் விற்பனையானது. அதன்மூலம் ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80-ம், பவுனுக்கு ரூ.640-ம் உயா்ந்துள்ளது.

ரூ.2 லட்சத்தை நெருங்கும் வெள்ளி விலை: தங்கத்தைப் போலவே, வெள்ளி விலையும் தொடா்ந்து உயா்ந்து வருகிறது. அந்த வகையில், திங்கள்கிழமை காலை வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயா்ந்து ரூ.195-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5,000 உயா்ந்து ரூ.1.95 லட்சத்துக்கும் விற்பனையானது. தொடா்ந்து, மாலையில் கிராமுக்கு ரூ.2 உயா்ந்து ரூ.197-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.2000 உயா்ந்து ரூ.1.97 லட்சத்துக்கும் விற்பனையானது.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT