வணிகம்

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.4,235 கோடி

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 2025-26-ஆம் நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ரூ.4,235 கோடியாக உள்ளது.

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 2025-26-ஆம் நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ரூ.4,235 கோடியாக உள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.4,235 கோடியாக உள்ளது, இது முந்தைய ஜூன் காலாண்டில் ரூ.3,843 கோடியாக இருந்ததை விட 10.2 சதவீதம் அதிகம்.

மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 10.6 சதவீதம் உயர்ந்து ரூ.31,942 கோடியாக உள்ளது. கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.28,862 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் பலி: அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் தடுத்திருக்கலாம்! பேரவையில் இபிஎஸ்

இன்றும் உயர்ந்தது தங்கம் விலை!

ரஜினியின் அடுத்த பட இயக்குநர் இவரா?

கரூர் பலி: விஜய் தாமதமே காரணம் - பேரவையில் முதல்வர் பேச்சு!

தில்லியில் 4 மணிநேரம் பட்டாசு வெடிக்க அனுமதி!

SCROLL FOR NEXT