புதுதில்லி: நோரியா மோட்டோஸூடன் இணைந்து ஸ்பெயின் சந்தையில் நுழைந்துள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் இன்று தெரிவித்துள்ளது.
இந்த விரிவாக்கம், ஐரோப்பாவில் தனது இருப்பை வலுப்படுத்தும் அதே வேளையில், தனது 50வது சர்வதேச சந்தையின் நுழைவை இது குறிக்கும் என்றது.
இதனிடையில், இத்தாலியிலும் எங்கள் பயணம் தொடரும் என்றது. அதே வேளையில் ஸ்பெயினில் எங்கள் அறிமுகம், ஐரோப்பா முழுவதும் எங்கள் தடத்தை மேலும் வலுப்படுத்தும் என்றார் ஹீரோ மோட்டோகார்ப் நிர்வாக துணைத் தலைவரான சஞ்சய்.
நோரியா மோட்டோஸ், ஸ்பெயின் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் 30க்கும் மேற்பட்ட அதிகாரப்பூர்வ விற்பனை மற்றும் சேவை மையங்களைக் கொண்ட ஸ்பானிஷ் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் தயாரிப்புகளை கிடைக்கச் செய்யும், அதே வேளையில் எக்ஸ்-பல்ஸ் (Xpulse) 200 4V, எக்ஸ்-பல்ஸ் (X-pulse) 200 4V ப்ரோ மற்றும் ஹங்க் (Hunk) 440 உள்ளிட்ட வாகனத்தை சந்தையில் விற்பனை செய்யும்.
இதையும் படிக்க: ஹெரிடேஜ் ஃபுட்ஸ் வருவாய் 5% அதிகரிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.