வணிகம்

ரூ.357 கோடி வருவாயை ஈட்டிய ப்ளூம் ஹோட்டல்ஸ்!

ப்ளூம் அதன் செயல்பாடுகளிலிருந்து வந்த வருவாய் 2024-25 நிதியாண்டில் 36.14 சதவிகிதம் அதிகரித்து ரூ.357.50 கோடியாக இருப்பதாக தெரிவித்தது.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: ப்ளூம் அதன் செயல்பாடுகளிலிருந்து வந்த வருவாய் 2024-25 நிதியாண்டில் 36.14% அதிகரித்து ரூ.357.50 கோடியாக இருப்பதாக தெரிவித்தது. இதுவே கடந்த நிதியாண்டில் இது ரூ.262.60 கோடியாக இருந்ததாக அதன் வருடாந்திர ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளில் அதன் ஆண்டு வருவாய் 6 மடங்கு உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. நிதியாண்டு 2022ல், இது ரூ.58 கோடியிலிருந்து நிதியாண்டு 2025ல் இது ரூ.357 கோடியாக அதிகரித்துள்ளதாக ப்ளூம் தெரிவித்தது.

வட்டிக்கு முந்தைய வருவாய், வரி, தேய்மானம் மற்றும் கடன்தொகை நீக்கம் உள்ளிட்டவை ரூ.75.01 கோடியாகவும், வரிக்குப் பிந்தைய லாபம் நிதியாண்டு 2025ல், ரூ.15.20 கோடியாக இருந்தது.

விரிவாக்கத் திட்டங்களின் ஒரு பகுதியாக மூலதன செயல்திறன், லாபம் மற்றும் தயாரிப்புகளை சமரசம் செய்யாமல், வரும் ஆண்டுகளில் 30 முதல் 35% வரம்பிற்குள் வருவாய் மற்றும் லாப வளர்ச்சியைத் தொடர நாங்கள் இலக்கு வைத்துள்ளோம் என்றது ப்ளூம்.

இதையும் படிக்க: ஐடிபிஐ வங்கியின் 2-வது காலாண்டு லாபம் இரட்டிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவுக்கு மாநில நலனில் அக்கறையில்லை: ஆா்.பி. உதயகுமாா் குற்றச்சாட்டு

கூா்கா சமுதாய விவகாரம்: பிரதமா் மோடிக்கு மம்தா கடிதம்

பிரமோஸ் மூலம் பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலத்தையும் தாக்க முடியும்: ராஜ்நாத் சிங்

தெலங்கானாவில் அறிவியல் கண்காட்சி: மாணவா்களைத் தயாா்படுத்த உத்தரவு

தூத்துக்குடியில் 3 நாள்களுக்குப் பின் கடலுக்குச் சென்ற மீனவா்கள்

SCROLL FOR NEXT