வணிகம்

சிட்டி யூனியன் வங்கி - டிஜிட்டல் பேமெண்ட் உலகில் ஒரு புதுமை!

சிட்டி யூனியன் வங்கி அறிமுகம் செய்துள்ள புதிய டிஜிட்டல் பேமெண்ட் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பையில் அக்டோபர் 7 முதல் 9 வரை நடைபெற்ற குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் - 2025 நிகழ்ச்சியில், சிட்டி யூனியன் வங்கி தனது பல புதிய டிஜிட்டல் பேமென்ட் தீர்வுகளை அறிமுகப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்திய கொடுப்பனவு கவுன்சில் (பிசிஐ), தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ), மற்றும் ஃபின்டெக் ஒருங்கிணைப்பு கவுன்சில் (எஃப்சிசி) ஆகியவை இணைந்து குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் - 2025 நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தது. “வாடிக்கையாளர்களுக்கு வசதி, பாதுகாப்பு மற்றும் எளிதான பண பரிமாற்றம்” என்பதே இதன் முக்கிய நோக்கம்.

இந்த புதிய சேவைகள் இந்தியாவின் தேசிய கொடுப்பனவு கழகம் மற்றும் பல தொழில்நுட்ப பங்குதாரர்களுடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை நாடு முழுவதும் பணப் பரிவர்த்தனைகளை மேலும் அதிகரிக்கவும், கட்டண செயல்முறைகளை எளிமைப்படுத்தி வாடிக்கையாளர் சேவைகளை பாதுகாப்புடன் மேம்படுத்தவும் உதவுகின்றன. டிஜிட்டல் இந்தியா நோக்கத்திலும் இது ஒரு பெரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

அறிமுகமான புதிய டிஜிட்டல் தயாரிப்புகள்:

 1. யுபிஐ சர்கிள் - மை டிவைசஸ்

ஸ்மார்ட் டிவி போன்ற ஐஓடி சாதனங்கள் மூலம் யுபிஐ பரிவர்த்தனைகளைச் செய்யும் வசதி. கைபேசி இல்லாமலேயே பாதுகாப்பான முறையில் சுலபமான பணப்பரிமாற்றம் இப்பொழுது சாத்தியமாகிறது. 

 2. யுபிஐ ரிசர்வ் பே (சிங்கிள் ப்ளாக், மல்டிபிள் டெபிட்)

வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கிக் கணக்கில் குறிப்பிட்ட பொருள்கள் அல்லது சேவைகளுக்காக ஒரு தொகையை தற்காலிகமாக பிளாக் செய்து தேவையான பொழுது அந்த தொகையில் இருந்து தவணைத் தொகைகளை கழிக்க அனுமதிக்கும் வசதி.

3. யுபிஐ ஹெல்ப்) – செய்யறிவுமூலம் இயக்கப்படும் சாட்பாட்

வாடிக்கையாளர்களுக்கு 24x7 உதவி வழங்கும் வகையில் மேம்பட்ட செய்யறிவு மற்றும் இயந்திரக் கற்றல் திறன்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள சாட்பாட் மூலம் யுபிஐ தொடர்பான கேள்விகள், புகார்கள் அனைத்துக்கும் விரைவான பதில்.

 4. யுபிஐ மூலம் டிஜிட்டல் வடிவில் பாதுகாப்பாக செயல்படுத்தும் முறை

நிறுவனங்கள் மற்றும் கூட்டு கணக்குதாரர்கள் யுபிஐ பயன்படுத்த ஒரு புதிய தீர்வு. ஒரு பரிவர்த்தனைக்கு பலரின் ஒப்புதல் தேவைப்படும்போது, அதனை டிஜிட்டல் வடிவில் பாதுகாப்பாக செயல்படுத்தும் முறை.

 5. யுபிஐ மூலம் மைக்ரோ ஏடிஎம்-ல் பணம் எடுப்பு

க்யூஆர் குறியீடு மூலம் யுபிஐ வழியாக பிசி மையங்களில் பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதியை வழங்குவதுடன் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் கூட, நிதி சேவையை மேம்படுத்த உதவும்.

 6. யுபிஐ-க்கு கூடுதல் அங்கீகார முறைகள் – கைரேகை அங்கீகாரம் அறிமுகம்

பொதுவாக யுபிஐ பரிவர்த்தனைகள் வாடிக்கையாளர்களின் கடவு எண் மூலம் அங்கீகரிக்கப்படுகின்றன. இப்போது, கடவு எண்ணுக்கு மாற்றாக கைரேகை மூலம் அங்கீகரிக்கப்படும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

7. முக அடையாள அங்கீகாரம்

கடவு எண்ணுக்கு மாற்றாக முக அங்கீகாரம் மூலம் பயன்படுத்தும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் எளிதான கடவு எண் அனுபவத்தை வழங்குகிறது.

8. மியூச்சுவல் ஃபண்ட் மீது உடனடி டிஜிட்டல்கடன் (புதிய வாடிக்கையாளர்களுக்கு):

தற்போது இருக்கும் வங்கியின் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ’மியூச்சுவல் ஃபண்ட் மீது உடனடி டிஜிட்டல் கடன்’ இப்போது புதிய வாடிக்கையாளர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 9. சியூபி டிசைர் – புதிய வாடிக்கையாளர்களுக்காக :

சியூபி மற்றும் சியூபி அல்லாத வாடிக்கையாளர்களுக்கும் சியூபி டிசைர் எனும் திட்டமிடப்பட்ட சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது எளிதாக சேமித்து, கனவுகளையும் எதிர்கால திட்டங்களையும் நிறைவேற்ற உதவுகிறது.

 10. சியூபி டிபெண்ட்

சியூபி டிபெண்ட் என்பது வாடிக்கையாளர்களின் நிலையான வைப்புத்தொகை ஆதாரத்தை பயன்படுத்தி, யுபிஐ வழியாக உடனடி, பாதுகாப்பான டிஜிட்டல் கடன் வரம்பை வழங்கும் சேவை.

 11. சியூபி ரூபே எம்எஸ்எம்இ அட்டை

இந்தியாவின் முதல் செய்யறிவு செயலாக்கப்பட்ட கிரெடிட் கார்டு. சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

சிட்டி யூனியன் வங்கி (பற்றி:

1904ல் தொடங்கிய சிட்டி யூனியன் வங்கி, தற்போது 120 ஆண்டுகளாக நாட்டிற்கு சேவை செய்து வருகிறது. கும்பகோணத்தில் தலைமையகத்துடன் 890-க்கும் மேற்பட்ட கிளைகள், 1700-க்கும் மேற்பட்ட ஏடிஎம்/பிஎன்ஏ-க்கள் மூலம் நாடு முழுவதும் செயல்படுகிறது.

வாய்ஸ்-அடிப்படையிலான மொபைல் பேங்கிங், வாய்ஸ் யுபிஐ123பே, டிஜிட்டல் கடன் வசதி, மற்றும் மோசடி தடுப்பு தொழில்நுட்பங்கள் போன்ற பல புதுமைகளில் முன்னணியில் இருக்கும் இவ்வங்கி, “புதுமை வழி நம்பிக்கை” என்ற கொள்கையை மேலும் வலுப்படுத்தி வருகிறதுசிட்டி யூனியன் வங்கி.

டிஜிட்டல் வங்கி உலகில் முன்னேறும் சிட்டி யூனியன் வங்கியின் புதிய முயற்சிகள், இந்தியாவின் நிதி சேவை துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன.

City Union Bank - An innovation in the world of digital payments!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீ விபத்தில் மூச்சுத் திணறி காங்கிரஸ் நிர்வாகி பலி!

பிகார் தேர்தல்: முதல்வர் முகம் தேஜஸ்வி, இந்தியா கூட்டணி தோல்வி உறுதி - பாஜக

மம்மூட்டியின் களம் காவல் படத்தின் வெளியீட்டுத் தேதி!

அதிமுக தலைமைக்கு 10 நாள் கெடு விதிக்கவில்லை: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

இந்திய வீராங்கனைகள் அசத்தல்! மழையால் ஓவர்கள் குறைப்பு.. நியூசிலாந்துக்கு 325 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT