முகப்பு
வணிகம்

அதிரடியாக குறையும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்!

தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...

Updated On : 23 அக்டோபர், 2025 at 3:56 AM
தங்கம் விலை
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் ரூ. 3,680 குறைந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ. 320 குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக குறைந்து வருகிறது. கடந்த அக். 18-ஆம் தேதி சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.96,000-க்கு விற்பனையானது.

தொடர்ந்து, தீபாவளியன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.11,920-க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.95,360-க்கும் விற்பனையானது. செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.12,000-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.96,000-க்கும் விற்பனையானது.

இதனிடையே, நேற்று(அக். 22) ஒரே நாளில் கிராமுக்கு ரூ. 460 குறைந்து ரூ. 11,540-க்கும் ஒரு சவரனுக்கு ரூ. 3,680 குறைந்து ரூ. 92,320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை மீண்டும் கிராமுக்கு ரூ. 40 குறைந்து ரூ. 11,500 -க்கும் ஒரு சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 92,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ரூ. 174-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,74,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

summary

Gold prices drop sharply! Today's situation!

முழு கட்டுரையைப் படிக்க →