பங்குச் சந்தைகள் இன்று(புதன்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 84,663.68 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.40 மணியளவில் சென்செக்ஸ் 280.14 புள்ளிகள் அதிகரித்து 84,908.30 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 108.95 புள்ளிகள் உயர்ந்து 26,045.15 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
நிஃப்டி 50 பங்குகளில் ப்ளூடார்ட், செயில், ஜிபிஐஎல், அதானி கிரீன், கிராஃபைட் போன்றவை அதிக லாபம் ஈட்டியுள்ளன.
சென்செக்ஸில் ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்.சி.எல். டெக், டிரென்ட், டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், டைட்டன், கோடக் வங்கி ஆகியவை அதிக லாபம் ஈட்டியவை. அதே நேரத்தில் எம் அண்ட் எம், டாடா மோட்டார்ஸ் பி.வி, பஜாஜ், எடர்னல், பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் சரிவைச் சந்தித்தன.
நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.31 சதவீதம் அதிகரித்தது. ஆனால் நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடு 0.04 சதவீதம் சரிந்தது.
துறைகளில், நிஃப்டி மெட்டல் குறியீடு 2.2 சதவீதம் உயர்ந்தது. நிஃப்டி எஃப்எம்சிஜி, பார்மா, ஐடி, ரியல் எஸ்டேட் குறியீடுகளும் நேர்மறையில் வர்த்தகமாகி வருகின்றன.
இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தை விரைவில் முடிவுக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகித குறைப்பு குறித்தும் இன்று முடிவு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இவை இந்திய பங்குச்சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.