கோப்புப் படம் 
வணிகம்

அமெரிக்க வரி எதிரொலி: ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு சரிவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று வரலாறு காணாத அளவுக்கு சரிந்து முடிவடைந்தது.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று வரலாறு காணாத அளவுக்குக் சரிந்து முடிவடைந்தது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் இந்திய ரூபாய் மதிப்பு பலவீனமான நிலையில் வர்த்தகமான நிலையில், அமெரிக்க வரிகள் மற்றும் அந்நிய முதலீடு ஆகியவை தொடர்ந்து வெளியேறி வருவதால் இந்திய ரூபாய் அதிக அழுத்தத்தில் இருந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

ரூபாய் ஆனது முந்தைய அமர்வில் 88.3075 என்ற வாழ்நாள் குறைந்த அளவை எட்டியது. ரிசர்வ் வங்கி கடந்த வாரம் ரூபாயை ஆதரிக்க நடவடிக்கை எடுத்த போதிலும், இந்திய ரூபாய் ரூ.88 என்ற நிலையில் இருந்தததாகவும், இது சந்தை வல்லுநர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 88.18 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு குறைந்தபட்சமாக ரூ.88.33 ஐ தொட்டது. முடிவில் 10 காசுகள் சரிந்து ரூ88.19ஆக முடிவடைந்தது.

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவுகளில் எந்தவித முன்னேற்றங்கள் இல்லை என்றால், ரூபாயின் நிலைத்தன்மையை எதிர்பார்க்க முடியாது என்றும், இது மேலும் புதிய குறைந்த அளவுகளை தொடும் என்றார் கரூர் வைஸ்யா வங்கியின் கருவூலத் தலைவர் வி.ஆர்.சி ரெட்டி.

இதையும் படிக்க: அந்நியச் செலாவணி கையிருப்பு 69,072 கோடி டாலராகச் சரிவு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகா கூட்டணியில் பிளவு? பிகார் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தனித்துப் போட்டி!

மொசாம்பிக்: படகு விபத்தில் 3 இந்தியர்கள் பலி, ஒருவர் காயம்

இடஒதுக்கீடு போராட்டத்தால் ஸ்தம்பித்தது தெலங்கானா! கடைகள், பெட்ரோல் பம்ப்கள் அடித்து உடைப்பு!

தீபாவளி அன்பும் ஒளியும்... ஹேலி தாருவாலா!

பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க... ஷிவானி ஜாதவ்!

SCROLL FOR NEXT