மும்பை பங்குச் சந்தை 
வணிகம்

நிலையற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி! மாற்றமின்றி நிறைவடைந்த பங்குச் சந்தை!

சென்செக்ஸ் 7.25 புள்ளிகள் குறைந்து 80,710.76 புள்ளிகளாகவும், 50-பங்கு கொண்ட நிஃப்டி 6.70 புள்ளிகள் அதிகரித்து 24,741 ஆக நிலைபெற்றது.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் ஆட்டோ மற்றும் எண்ணெய் & எரிவாயு பங்குகள் உயர்ந்த நிலையில் ஐடி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளின் சரிந்த நிலையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி முந்தைய முடிவில் இருந்து மாற்றமின்றி 7 புள்ளிகள் சரிந்து நிறைவடைந்தன.

நிலையற்ற வர்த்தகத்திற்குப் பிறகு, 30-பங்கு பிஎஸ்இ சென்செக்ஸ் 7.25 புள்ளிகள் குறைந்து 80,710.76 புள்ளிகளாகவும், 50-பங்கு கொண்ட நிஃப்டி 6.70 புள்ளிகள் அதிகரித்து 24,741 ஆக நிலைபெற்றது.

சென்செக்ஸில் மஹிந்திரா & மஹிந்திரா 2.34 சதவிகிதம் உயர்ந்ததும், அதைத் தொடர்ந்து மாருதி 1.70 சதவிகிதம் உயர்ந்தது. அதே வேளையில் பவர் கிரிட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாரதி ஏர்டெல் மற்றும் எடர்னல் ஆகியவை உயர்ந்து முடிந்தன. இருப்பினும் ஐடிசி, எச்.சி.எல் டெக், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டெக் மஹிந்திரா மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை சரிந்து முடிவடைந்தன.

இந்திய பங்குச் சந்தைகள் இன்று சரிவுடன் முடிவடைந்தன. ஆனால் முக்கிய குறியீடுகளில் முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ந்து வாங்கியதால், சரிந்த நிலையில் இருந்து மீண்டது இந்திய பங்குச் சந்தை. அதே வேளையில் ஆட்டோ துறை பங்குகளில் இன்றயை வர்த்தகம் சிறப்பாக இருந்தது.

உலகளாவிய நேர்மறையான குறிப்புகளும் பங்குச் சந்தைக்கு மேலும் ஆதரவை அளித்தன. அமெரிக்க வேலைவாய்ப்பு அறிக்கைக்கு முன்னதாக அமெரிக்க மற்றும் ஆசிய சந்தைகள் உயர்ந்து வர்த்தகமானது.

ஆசிய சந்தைகளில் தென் கொரியா கோஸ்பி, ஜப்பான் நிக்கேய் 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை உயர்ந்து வர்த்தகமானது.

ஐரோப்பாவில் சந்தைகள் உறுதியான நிலையில் வர்த்தகமானது. நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க சந்தைகள் உயர்ந்து முடிந்தன.

அந்நிய முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ.106.34 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ள நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.2,233.09 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.07 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 66.93 அமெரிக்க டாலர்களாக உள்ளது.

இதையும் படிக்க: என்டாா்க் 150 ஸ்கூட்டா்: டிவிஎஸ் அறிமுகம்

Benchmark stock indices Sensex and Nifty closed unchanged after a volatile session on Friday as gains in oil & gas and auto shares were offset by losses in IT and FMCG shares.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடலூர் சிப்காட் ஆலையில் ரசாயன கசிவு! 40 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓணம் அல்டிமேட்... ஐஸ்வர்யா தேவன்!

ஓணம் சேச்சி... சாதிகா!

ஓணம் பாரம்பரியம்... மௌனி ராய்!

கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்

SCROLL FOR NEXT