கோப்புப் படம் 
வணிகம்

ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: 3வது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

சென்செக்ஸ் 323.83 புள்ளிகள் (0.40%) உயர்ந்து 81,425.15 ஆகவும், நிஃப்டி 104.50 புள்ளிகள் (0.42%) உயர்ந்து 24,973.10 ஆக நிலைபெற்றது.

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் குறித்த நம்பிக்கையாலும், உள்ளூர் வர்த்தகத்தில் ஐடி மற்றும் மூலதனப் பங்குகள் மீட்சியடைந்ததும், அடுத்த வாரம் நடைபெற உள்ள அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதக் குறைப்பு குறித்த நம்பிக்கையாலும் இன்றைய வர்த்தகத்தில் பங்குச் சந்தைகள் உயர்ந்து முடிவடைந்தன.

சென்செக்ஸ் 323.83 புள்ளிகள் (0.40%) உயர்ந்து 81,425.15 ஆகவும், நிஃப்டி 104.50 புள்ளிகள் (0.42%) உயர்ந்து 24,973.10 ஆகவும், தொடர்ந்து ஆறாவது முறையாக லாபம் ஈட்டியது.

ஐடி மற்றும் மூலதனப் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் முன்னிலை வகித்தன. பாரத் எலக்ட்ரானிக்ஸ், எச்.சி.எல் டெக், பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, இன்ஃபோசிஸ், டி.சி.எஸ், டெக் மஹிந்திரா மற்றும் எஸ்.பி.ஐ. ஆகியவை அதிக லாபம் ஈட்டின. ஆட்டோமொபைல் நிறுவனங்களான எம் & எம், மாருதி, டாடா மோட்டார்ஸ் மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் சரிந்தன.

இன்றைய வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 323.83 புள்ளிகள் உயர்ந்து 81,425.15 ஆகவும், நிஃப்டி 104.5 புள்ளிகள் உயர்ந்து 24,973.10 ஆக நிலைபெற்றது. பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 0.7% வரை உயர்ந்தன.

நிஃப்டி-யில் பாரத் எலக்ட்ரானிக்ஸ், விப்ரோ, எச்.சி.எல் டெக்னாலஜிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், டி.சி.எஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் எம் & எம், ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிவடைந்தன.

துறை வாரியாக ஆட்டோ குறியீடு 1% சரிந்தது. ஐடி குறியீடு 2.6% அதிகரித்த நிலையில் பொதுத்துறை வங்கி குறியீடு 2.2% உயர்ந்தது. இதனையடுத்து ரியல் எஸ்டேட் குறியீடு 1% உயர்ந்தது.

அமெரிக்கா-இந்தியா உடனான வர்த்தக மோதல்களைத் தீர்க்க பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குவது குறித்து சமிக்ஞையை தொடர்ந்து அபெக்ஸ் ஃப்ரோஸன் ஃபுட்ஸ் பங்குகள் 16%, அவந்தி ஃபீட்ஸ் 15%, கோஸ்டல் கார்ப்பரேஷன் பங்குகள் 20%, கோகல்டாஸ் எக்ஸ்போர்ட்ஸ் 4%, வெல்ஸ்பன் லிவிங் 8%, அரவிந்த் பங்குகள் 4% உயர்ந்தன.

முதல் காலாண்டின் ஒருங்கிணைந்த லாபம் 483% உயர்ந்ததால் விக்ரம் சோலார் பங்குகள் 5% உயர்வு. கெல்டன் டெக் பங்குகள் E-குரூப் ஐசிடி சாப்ட்வேர் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட நிலையில் அதன் பங்குகள் 5.4% அதிகரித்தன.

எம்டிஏஆர் டெக்னாலஜிஸ் பங்குகள் ரூ.386 கோடி ஆர்டர்கள் பெற்றதையடுத்து அதன் பங்குகள் 4% அதிகரித்தன. சி.க்யு.டி. வெப்போன் சிஸ்டம்ஸ் உடனான கூட்டாணியால் பிரைட்காம் பங்குகள் 5% அதிகரித்தன.

மமதா மெஷினரி பங்குகள் $1.17 மில்லியன் ஆர்டரை வென்றதையடுத்து அதன் பங்குகள் 16% உயர்ந்தன. எம்ஐசி எலக்ட்ரானிக்ஸ் பங்குகள் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட டாப்2 பி.டி.இ. உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் 5.7% உயர்ந்தன.

சில்வர் டச் டெக்னாலஜிஸ் பங்குகள் இந்திய விமான நிலைய ஆணையத்தின் திட்ட வெற்றியில் 4.5% அதிகரித்தன. ஆரக்கிள் பைனான்சியல் செர்விக்ஸ் சாப்ட்வேர் பங்குகள் $0.5 டிரில்லியன் கிளவுட் வணிகக் கண்ணோட்டத்திற்குப் பிறகு 10% க்கும் மேலாக உயர்ந்தது.

இந்தியன் வங்கி, எச்.பி.எல். இன்ஜினியரிங், குஜராத் மினரல், மகாராஷ்டிரா ஸ்கூட்டர்ஸ், கம்மின்ஸ் இந்தியா, ஐஷர் மோட்டார்ஸ், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், மணப்புரம் ஃபைனான்ஸ், போஷ், முத்தூட் ஃபைனான்ஸ், மாருதி சுசுகி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் இன்று 52 வார உச்சத்தைத் தொட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் திமுக தலையிடாது: அமைச்சா் துரைமுருகன்

புன்னகை சிந்தும்... அகிலா!

கேரளத்து பைங்கிளி... நமீதா பிரமோத்!

சக்தி திருமகன் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி - புகைப்படங்கள்

குஜராத் ரசாயன ஆலையில் வாயுக் கசிவு: ஒருவர் பலி; 12 பேருக்கு தீவிர சிகிச்சை

SCROLL FOR NEXT