PTI Graphics
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ.88.28 ஆக நிறைவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்த அளவிலிருந்து 7 காசுகள் உயர்ந்து ரூ.88.28 ஆக நிறைவடைந்தது.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: அமெரிக்க டாலர் குறியீட்டெண் பலவீனம் மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நேர்மறையான தாக்கம் உள்ளிட்ட காரணமாக, இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்த அளவிலிருந்து 7 காசுகள் உயர்ந்து ரூ.88.28 ஆக நிறைவடைந்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 88.39ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு குறைந்தபட்சமாக ரூ.88.42 ஐ தொட்ட நிலையில், முடிவில் 7 காசுகள் உயர்ந்து ரூ.88.28-ஆக முடிவடைந்தது.

நேற்று (வியாழக்கிழமை) இந்திய ரூபாய் மதிப்பு 24 காசுகள் சரிந்து, அமெரிக்க டாலருக்கு நிகராக ரூ.88.35 என்ற குறைந்த அளவில் முடிவடைந்தது.

இதையும் படிக்க: சென்செக்ஸ் 356 புள்ளிகளும், நிஃப்டி 25,100 புள்ளிகளுக்கு மேலே சென்று நிறைவு!

The Indian rupee recovered from all-time lows and settled for the day higher by 7 paise at 88.28 against the US dollar on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP

“காந்தி பெயரை வைத்து அரசியல் செய்யாதீர்கள்!” தமிழிசை சௌந்தரராஜன்

பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிர் அணியுடன் சச்சின் சந்திப்பு!

ஷுப்மன் கில் தொடரில் இருந்து விலகல்..! அணியில் இணையும் சஞ்சு சாம்சன்!

முக்கியத்துவம் பெறும் பிரதமர் மோடியின் ஓமன் பயணம்! காரணம் இதுதான்..!

SCROLL FOR NEXT