கொல்கத்தா: ஆட்டோமொபைல் துறையில் ஜிஎஸ்டி விகிதக் குறைப்புக்கு பிறகு தேவையை அதிகரிக்கும் என்றது டிவிஎஸ் மோட்டார்ஸ்.
புதிய தலைமுறையினரை இலக்காகக் கொண்டு, டிவிஎஸ் 150 சிசி ஸ்கூட்டரை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆட்டோமொபைல் துறையில் ஜிஎஸ்டி விகிதம் 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தேவையில் ஒரு பெரிய அதிகரிப்பு உருவாக்கும். இந்த தேவை அதிகரிப்பை டிவிஎஸ் சந்திக்கும் திறன் கொண்டது என்றார் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பயணிகள் மற்றும் மின்சார வாகன வணிகம் - மூத்த துணைத் தலைவர் அனிருத்தா ஹல்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
டிவிஎஸ் இந்தியாவில் மூன்றாவது பெரிய இரு சக்கர வாகன உற்பத்தியாளர் என்றும், இது அதன் உள் எரிப்பு என்ஜின் மற்றும் மின்சார வாகனங்கள் பிரிவுகளிலும் உள்ளதாக தெரிவித்தார்.
ஆகஸ்ட் 2025 வரையில் அதன் உள் எரிப்பு என்ஜின் வாகனங்களை பொறுத்த வரையில் 20 சதவிகித சந்தைப் பங்கையும், எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை பெறுத்த வரையில் 26 சதவிகித சந்தைப் பங்கையும் கொண்டுள்ளது.
மைசூர், ஹிமாசலப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளதால், எதிர்பார்க்கப்படும் தேவையை பூர்த்தி செய்ய போதுமான திறன் நிறுவனத்திற்கு உள்ளது என்றார்.
நிறுவனம் தற்போது 100 சிசி, 110 சிசி, 125 சிசி, 150 சிசி, 200 சிசி, 225 சிசி மற்றும் 300 சிசி பிரிவுகளில் செயல்படுகிறது. அதே வேளையில் மாதத்திற்கு சுமார் 40,000 மொபெட்களையும் உற்பத்தி செய்து வருகிறது என்றார்.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ.88.28 ஆக நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.