புதுதில்லி: விவசாயம் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான சில்லறை பணவீக்கம் ஜூலை மாதம் முறையே 0.77 மற்றும் 1.01 சதவிகிதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் 1.07 மற்றும் 1.26 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விவசாயத் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு ஆகஸ்ட் 2025ல் 1.03 புள்ளிகள் அதிகரித்து 136.34 ஆகவும், கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான குறியீடு 0.94 புள்ளிகள் அதிகரித்து 136.60 ஆக உயர்ந்துள்ளது.
ஆகஸ்ட் 2025ல் விவசாயத் தொழிலாளர்களுக்கு உணவு குறியீடு 1.39 புள்ளிகளும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு 1.29 புள்ளிகளும் அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் 2025ல் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான ஆண்டுக்கு ஆண்டு பணவீக்க விகிதம் முறையே 1.07 முதல் 1.26 சதவிகிதமாகவும் இருந்தது.
ஆகஸ்ட் 2025ல் உணவுப் பணவீக்கம் (-) 0.55 சதவிகிதமாகவும், கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு (-) 0.28 சதவிகிதமாகவும் இருந்தது.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.88.11ஆக நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.