தங்கம் விலை நிலவரம் 
வணிகம்

இன்றும் தங்கம் விலை உயர்ந்ததா? விலை நிலவரம்!

சனிக்கிழமை காலை தங்கம் விலை உயர்ந்து விற்பனையாகி வருகிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: சென்னையில் வார இறுதி நாளான சனிக்கிழமை காலை, ஆபரணத் தங்கம் விலை உயர்வுடன் வணிகமாகி வருகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை காலை, சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.82,320-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை இந்த மாதத்தின் தொடக்கம் முதலே அதிக ஏற்றத்துடனும், அவ்வப்போது சில சிறு சிறு தொகைகள் இறக்கத்துடனும் வணிகமாகி வருகிறது.

இந்த வாரத்தில், புதன்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.82,160-க்கு விற்பனையான நிலையில், வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.10,220-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.81,760-க்கும் விற்பனையானது.

ஆனால், இந்த நிலை நீடிக்கவில்லை. வெள்ளிக்கிழமை தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.10,230-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.81,840-க்கும் விற்பனையான நிலையில் இன்றும் உயர்வைக் கண்டுள்ளது.

ஒரு கிராம் தங்கம் விலை ரூ.60 உயர்ந்து, ரூ.10,290க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு சவரன் ரூ.82,320 க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் உயர்வு

அதேபோன்று வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.145-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1.45 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காவிரி கடைமடையில் தவெக தலைவர் விஜய்! சற்று நேரத்தில் பிரசாரம்

எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு?

செம்பரம்பாக்கம் குடிநீர் வழங்கும் திட்டம்: தொடக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

தேசிய கீதங்கள்: திருத்தங்கள், மாற்றங்கள், காரணங்கள்!

சென்னையில் போலி கால்சென்டர்கள்: 2 பெண்களை கைது செய்த புதுச்சேரி போலீஸ்!

SCROLL FOR NEXT